மின்னல் தாக்கி ஐவர் படுகாயம்!!

மின்னல் தாக்கி ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் கொத்மலை – ரம்பொட பகுதியில் இன்று நடந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த ஐவரும் கொத்மலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மின்னல் தாக்கம் காரணமாக வீடொன்றும் சேதமடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

You might also like