கற்களுக்குள் மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் பறிமுதல்!!

சட்ட விரேதமாகக் கடத்தப்பட்ட சுமார் 8 லட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் இன்று பறிமுதல் செய்தனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, இரணைமடுவில் வைத்து டிப்பர் வாகனத்தைப் பொலிஸார் சோதனையிட்டனர்.

அதில் கற்களுக்குள் மறைத்தவாறு வைக்கப்பட்டிருந்த 198 தேக்கு மற்றும் பாலை மரக்குற்றிகளைப் பொலிஸார் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட வாகன சாரதி மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள்ளார்.

You might also like