சங்­கானை பிர­தேச செய­ல­கம் துடுப்பாட்டத்தில் சம்­பி­யன்

யாழ்ப்­பாண மாவட்ட செய­லக விளை­யாட்­டுப் பிரி­வி­ன­ரால் நடத்­தப்­பட்ட பிர­தேச செய­லக அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில் பெண்­கள் பிரி­வில், சங்­கானை பிர­தேச செய­லக அணி 11 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்­றுச் சம்­பி­ய­னா­னது.

சுழி­பு­ரம் யங்ஸ்­ரார் விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில்
சங்­கானை பிர­தேச செய­லக அணியை எதிர்த்து நல்­லூர் பிர­தேச செய­லக அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய சங்­கானை பிர­தேச செய­லக அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 5 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் இலக்­கு­கள் எத­னை­யும் பறி­கொ­டுக்­கா­மல் 65 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக கலை­மதி 27, ரஜிதா 23 ஓட்­டங்­க­ளைப் பெற்­றுக் கொடுத்­த­னர்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய நல்­லூர் பிர­தேச செய­லக அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 5 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் இரண்டு இலக்­கு­களை இழந்து 54 ஓட்­டங் க­ளைப் பெற்று 11 ஓட்­டங்­க­ளால் தோல்­வி­ய­டைந்­தது. அதி­க­பட்­ச­மாக சுபர்ணா 22, கஜந்­தினி 15 ஓட்­டங்­க­ளை­ப் பெற்­ற­
னர்.

You might also like