காளி படத்துக்கு தடை விதிப்பு!!

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘காளி’ படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘அண்ணாதுரை’ படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை, ‘பிக்சர் பாக்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் வாங்கி வெளியிட்டார். அதனால் நிறுவனத்துக்கு நட்டம் ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது.

‘அண்ணாதுரை’யால் தனக்கு ஏற்பட்ட நட்டத்தைக் கொடுத்து விட்டு ‘காளி’ படத்தை வெளியீடு  செய்ய வேண்டும்  என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அலெக்ஸாண்டர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘காளி’ படத்தை வெளியிடத் தடை விதித்ததோடு, நட்டப்ப பணத்தை அலெக்ஸாண்டருக்காக நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு ‘காளி’ படத்தை வெளியீடு செய்து கொள்ளலாம். இல்லையென்றால், தடை தொடரும்’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

You might also like