வாள்­வெட்­டுக்­க­ளில் இரு­வ­ருக்­குக் காயம்!!

கொடி­கா­மம், மற்­றும் தெல்­லிப்­ப­ழைப் பகு­தி­களில் நேற்று இரவு 10.30 மணி­ய­ள­வில் இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளில் இளை­ஞர்­கள் இரு­வர் படு­கா­யம­டைந் துள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கொடி­கா­மத்­தில் மந்­து­வில் கிழக்­குப் பகு­தி­யில் வாள்­வெட்டு இடம்­பெற்­றுள்­ளது. வீதி­ய­ருகே நின்­றி­ருந்த இளை­ஞர்­கள் மீது மோட்­டார் சைக்­கி­ளில் வந்­த­வர்­க­ளால் வாள்­வெட்டு நடத்­தப்­பட்­டுள்­ளது. அதே இடத்­தைச் சேர்ந்த நட­ராசா கீர்த்­தி­கன் (வயது 21) என்ற இளை­ஞன் நெஞ்சு மற்­றும் காலில் வெட்­டுக் காயங்­க­ளுக்கு இலக்­கா­கி­னார்.

அவர் உட­ன­டி­யாக சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டு சேர்க்­கப்­பட்­டார். பின்­னர் அங்­கி­ருந்து மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் மாற்­றப்­பட்­டார்.

அதே­வேளை தெல்­லிப்­ப­ழைப் பகு­தி­யி­லும் வாள்­வெட்­டுச் சம்­ப­வம் நடந்­துள்­ளது. அதில் 19 மாண­வர் காய­ம­டைந்­தார். வீட்­டுக்கு வெளியே நின்­றி­ருந்­த­வர் மீது மோட்­டார் சைக்­கி­ளில் வந்­த­வர்­கள் தாக்­கு­தல் நடத்­தி­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. காய­ம­டைந்த மாண­வர் தெல்­லிப்­பழை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like