கேப்­பா­பி­ல­வுப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண வலி­யு­றுத்­து­வோம்- மாவை எம்.பி. !!

கேப்­பா­பி­லவு மக்­க­ளின் காணிப் பிரச்­சி­னைக்கு ஏற்­க­னவே அரசு உடன்­பட்­ட­வாறு தீர்வு காண வேண்­டும் என்று அரச தலை­வ­ரி­ட­மும், தலைமை அமைச்­ச­ரி­ட­மும் நாம் வலி­யு­றுத்­து­வோம் என்று தெரி­வித்­தார்
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை. சோ.சேனா­தி­ராஜா.

முல்­லைத்­தீ­வில் திட்­ட­மிட்டு தமி­ழர் நிலங்­களை அப­க­ரிக்­கும் அர­சின் செயற்­பாடு தொடர்­பாக ஆராய்­வ­தற்கு வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே. சிவ­ஞா­னம் தலை­மை­யி­லான அமைச்­சர்­கள் மற்­றும் உறுப்­பி­னர்­கள் அடங்­கிய குழு நேற்று முல்­லைத்­தீ­வுக்­குச் சென்­றது.

அத்­து­மீ­றிய நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­றும் பகு­தி­க­ளை­யும் அவர்­கள் பார்­வை­யிட்­ட­னர். அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­தி­ரா­ஜா­வும் முல்­லைத்­தீவு சென்­றி­ருந்­தார். அவர் கோப்­பா­பி­ல­வில் 408ஆவது நாளா­கத் தொடர் போராட்­டம் நடத்­தி­வ­ரும் மக்­க­ளைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார்.

அங்கு விடு­விக்­கப்­பட்ட பகு­தி­க­ளில் தேசிய வீட­மைப்பு அதி­கார சபை­யால் அமைத்­துக் கொடுக்­கப்­ப­டும் வீடு­க­ளை­யும் பார்­வை­யிட்­டார்.
அதன்­பின்­னர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­தா­வது,

மாகாண சபை­யின் தீர்­மா­னத்­தின் அடிப்­ப­டை­யில் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் உள்ள காணிப் பிரச்­சி­னை­கள் தொடர்­பி­லும் தொடர்ச்­சி­யான சிங்­கள குடி­யேற்­றங்­கள், வெளி­மா­வட்ட மீன­வர்­க­ளின் பிரச்­ச­னை­கள் என்­பன தொடர்­பி­லும் பார்­வை­யிட மாகாண சபை உறுப்­பி­னர்­கள் வந்­துள்­ள­னர். அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக நாங்­க­ளும் வந்­துள்­ளோம்.

அரச தலை­வர் மற்­றும் தலைமை அமைச்­சர் இடையே பல முரண்­பா­டு­கள் இருந்த பொழு­தி­லும் தமிழ்­மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காணு­வோம் என்று எம்­மு­டன் கடந்த 3ஆம் திகதி நடந்த சந்­திப்­பில் கூறி­யி­ருந்­த­னர்.
மகா­வலி வல­யத்­துக்­குள் வரும் 2 ஆயி­ரத்து 500 ஏக்­கர் காணி­கள் கைய­கப்­ப­டுத்­தப்­ப­டும் அபா­யம் இருக்­கின்­றது.

எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னும், நானும் இது தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் பேசி­யுள்­ளோம். மகா­வலி அபி­வி­ருத்­தித் திட்­டம் அரச தலை­வ­ரின் அமைச்­சுக்­குள்­ளேயே வரு­கின்­றது. அந்­தக் காணி­களை சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்த முடி­யாது. அவ்­வாறு பயன்­ப­டுத்­து­வ­தாக இருந்­தால் பிர­தே­சத்­தைச் சேர்ந்த மக்­களே அங்கு குடி­யேற்­றப்­பட வேண்­டும்.

தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்­த­வர்­களோ அல்­லது வெளி­மா­வட்­டத்­தைச் சேர்ந்த தமிழ்­ மக்­கள் அல்­லா­த­வர்­களோ மகா­வலி அபி­வி­ருத்­திட்­டத்­தின் கீழ் குடி­யேற்­று­வ­தற்கு நாங்­கள் அனு­ம­திக்க மாட்­டோம் என்று அரச தலை­வ­ரி­டம் எடுத்­து­ரைத்­தோம். அவ்­வாறு நடக்­காது என்ற வாக்­கு­று­தியை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன எமக்­குத் தந்­துள்­ளார்.- என்­றார்.

You might also like