வடக்கு புதிய அமைச்­சர்­களை விசா­ரிக்­கக் குரே நட­வ­டிக்கை!

வடக்கு மாகாண சபை­யின் புதிய அமைச்­சர்­கள் மீது சுமத்­தப்­பட்டுள்ள மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பில் விசா­ரணை நடத்த, வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

புதிய அமைச்­சர்­கள் மூவ­ருக்கு எதி­ராக மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. ‘பிக்­கப்’ வாக­னம் பயன்­ப­டுத்­தா­மல் அதற்­கு­ரிய கொடுப்­ப­னவை பெற்­றுக் கொண்­டமை, தனிப்­பட்ட ஆள­ணி­யில் நிய­மிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டன் கூட்டு வங்­கிக் கணக்கு வைத்­தி­ருந்து அவர்­க­ளின் சம்­ப­ளப் பணத்­தைப் பெற்­றுக் கொண்­டமை, தனிப்­பட்ட ஆள­ணி­யில் பெயர் குறிப்­பிட்டு பணி­யாற்­றா­த­வர்­க­ளுக்கு சம்­ப­ளம் வழங்­கி­யமை உள்­ளிட்ட மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

இது தொடர்­பில் விசா­ரணை நடத்தி அறிக்கை சமர்­பிக்­கு­மாறு, வடக்கு மாகாண தலை­மைச் செய­ல­ரைக் கோரும் கடி­தத்தை ஆளு­நர் இன்று அனுப்­ப­வுள்­ளார் என்று நம்­பிக்­கை­யா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

You might also like