சிரி­யாவை தாக்­கி­யது இஸ்­ரேல்!!

சிரி­யா­வின் கவுட்டா நக­ரில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடத்­தப்­பட்ட இர­சா­ய­னத் தாக்­கு­த­லில் சுமார் 100 பொது­மக்­கள் உயி­ரி­ழந்­த­னர். அவர்­க­ளில் பலர் குழந்­தை­கள். இந்­தத் தாக்­கு­தலை சிரிய அரசே மேற்­கொண்­டது என்று அமெ­ரிக்கா குற்­றஞ்­சாட்­டி­யது. இதை­ய­டுத்து சிரிய அர­சுக்­குப் பதி­லடி கொடுக்­கும் வகை­யில், சிரி­யா­வின் இரா­ணு­வத் தளத்­தின் மீது வான் தாக்­கு­தலை நடத்­தி­யது இஸ்­ரேல்.

சிரி­யத் தலை­ந­கர் டமஸ்­க­ஸூ­டன் எல்­லை­யைப் பகி­ரும் கவுட்டா நக­ரில் அண்­மைக் கால­மாக போர் இடம்­பெற்று வரு­கி­றது. சிரிய அதி­பர் அசாத்­துக்கு எதி­ரான ஆய­தக் குழு­வின் பிடி­யில் இருந்த இந்த நகர் தற்­போது அரச தரப்­பின் கட்­டுப்­பாட்­டுக்­குள் வரும் நிலையே உள்­ளது. அங்கு கடந்த 8ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை உலங்கு வானூர்­தி­கள் மூலம் இர­சா­ய­னத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது.

இந்­தத் தாக்­கு­த­லில் சுமார் 100 பேர் உயி­ரி­ழந்­த­னர். அவர்­க­ளில் பெரும்­பா­லா­னோர் சிறு­வர்­கள். சிரி­யா­வில் செயற்­பட்­டு­வ­ரும் மனித உரி­மை­கள் கண்­கா­ணிப்­ப­கம் இந்­தத் தாக்­கு­தலை உறு­திப்­ப­டுத்­தி­யது. சிரிய அரசே இந்­தத் தாக்­கு­தலை நடத்­தி­யது என்று அமெ­ரிக்கா, பிரான்ஸ், பிரிட்­டன் உள்­ளிட்ட நாடு­கள் குற்­றம் சுமத்­தின.

விரை­வில் இதற்­குப் பதி­லடி கொடுக்­கப்­ப­டும் என்று அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் எச்­ச­ரித்­தி­ருந்­தார். இதை­ய­டுத்து, இஸ்­ரே­லின் எப்.-15 போர் வானூர்­தி­கள் சிரி­யா­வின் மத்­திய பகு­தி­யில் அமைந்­துள்ள டி-4 வானூர்­தித் தளத்­தின் மீது தாக்­கு­தல் நடத்­தின என்று பன்­னாட்டு ஊட­க­மான ரொயிட்­டர்ஸ் செய்தி வெளி­யிட்­டது.

You might also like