சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது!!

யாழ்ப்­பாண கல்வி வலய பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் 20 வயது ஆண்­கள் பிரி­வில் யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி கிண்­ணம் வென்­றது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி மோதி­யது.

ஆட்­டத்­தின் 16ஆவது நிமி­டத்­தில் சென். பற்­றிக்­ஸின் முத­லா­வது கோலைப் பதி­வு­செய்­தார் கிறிஸ்­தீ­பன். 21ஆவது நிமி­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மத்­தி­யின் கோலைப் பதி­வு­செய்­தார் பெலின். நிர்­ண­யிக் கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணிக­ளும் தலா ஓர் கோலைப் பெற்ற நிலை­யில் முதல் பாதி முடி­வுக்கு வந்­தது.

இரண்­டா­வது பாதி­யின் 12ஆவது நிமி­டத்­தில் சென். பற்­றிக்ஸ் அணி­யின் இரண்­டா­வது கோலைப் பதி­வு­செய்­தார் அபி­சன். 24ஆவது நிமி­டத்­தில் சென். பற்­றிக்­ஸின் மூன்­றா­வது கோலைப் பதி­வு­செய்­தார் கெயின்ஸ். முடி­வில் 3:1 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி அணி.

You might also like