அடுத்த முதலமைச்சர் வேட்பாளருக்கான மோதல்!!

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக அடுத்த தேர்­த­லில் போட்­டி­யி­டப் போகின்றவர் யார் என்­கிற சூடான விவா­தம் ஆரம்­பித்­து­விட்­டது. வடக்கு மாகாண சபை­யின் பத­விக் காலம் முடி­வ­தற்கு இன்­றும் 6 மாதங்­கள் இருக்­கின்­றன. அது முடி­யும் தறு­வா­யில் அல்­லது முடிந்த சில மாதங்­க­ளில் மாகாண சபைக்­கான தேர்­தல் நடக்­க­லாம். நடக்­கா­ம­லும் போக­லாம்.

மாகாண சபை­கள் திருத்­தச் சட்­டத்தை கடந்த ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றி­ய­போது ஒரு வரு­டத்துக்குள் மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தாக அரசு அதில் தெரி­வித்­தி­ருந்­தது. பத­விக் காலம் முடி­வ­டைந்த மாகாண சபை­க­ளுக்­குத் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­த­வேண்­டும் என்­கிற வலி­யு­றுத்­தல் தீவி­ர­மா­ன­போது, அதனை ஒத்தி வைத்து எல்லா மாகாண சபை­க­ளுக்­கும் ஒரே நேரத்­தில் தேர்­தலை நடத்­தப்­போ­வ­தாக அரசு அறி­வித்­தது.

அர­சின் அந்த முடி­வுக்கு எதி­ராக நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தொட­ரப்­பட்டு அப்­ப­டிச் செய்­வது பிழை என்று தீர்ப்­புக் கூ­றப்­பட்­ட­போது, பின்­க­த­வால் மாகாண சபை­கள் தேர்­தல்­கள் தொடர்­பான திருத்­தத்தை நிறை­வேற்­றி­யது அரசு. அதன் மூலம் எல்லா மாகாண சபை­க­ளுக்­கும் ஒரு வருட காலத்­தில் தேர்­தல் நடத்­தப்­ப­டும் என்­றும் அந்­தச் சட்­டத்­தில் சொல்­லப்­பட்­டது.

ஆனால், உள்ளூராட்­சித் தேர்­த­லி­லும் பின்­ன­டை­வைச் சந்­தித்­தி­ருக்­கும் நிலை­யில் ஏதா­வது திரு­கு­தா­ளங்­க­ளைச் செய்து மீண்­டும் மாகாண சபைத் தேர்­தல்­களை அரசு பின்­போ­டாது என்று சொல்­வ­தற்­கில்லை.
இப்­படி இந்த வரு­டத்­தில் மாகாண சபைத் தேர்­தல் நடக்­குமா நடக்­காதா என்­பதே அறு­தி­யா­கத் தெரி­யாத நிலை­யி­லும் வடக்கு மாகாண சபை­யின் அடுத்த முத­ல­மைச்­சர் வேட் பாளர் யார் என்­கிற விட­யம் சூடு­பி­டித்­தி­ருக்­கி­றது.

அடுத்த முத­ல­மைச்­ச­ராக தற்­போ­தைய முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை நிறுத்­தப்­போ­வ­தில்லை என்று கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தி­ருந்­தார். விக்­னேஸ்­வ­ரன் 2 வரு­டங்­க­ளுக்கு மட்­டுமே பத­வி­யில் இருப்­பேன் என்­று­கூறி வந்­த­வர், அத­னால் அவ­ரைத் தொடர்ந் தும் துன்­பப்­ப­டுத்­தக்­கூ­டாது என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

ஆனால், முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ரைப் பொறுத்த நேரத்­தில் தெரிவு செய்­வோம் என்று கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தி­ருக்­கி­றார். விக்­னேஸ்­வ­ரன்­தான் அடுத்த வேட்­பா­ளர் என்று அவர் உறு­திப்­ப­டுத்­தாத நிலை­யை­யும் அண்­மைக்­கா­ல­மாக கூட்­ட­மைப்­புத் தொடர்­பில் சுமந்­தி­ரன் முன்­கூட்­டியே தெரி­விக்­கும் கருத்­துக்­கள்­தான் பின்­னர் கூட்­ட­மைப்­பின் முடி­வு­க­ளாக மாறு­கின்­றன என்­ப­தைப் பார்க்­கும்­போ­தும் கூட்­ட­மைப்­பின் வேட்­பா­ள­ராக முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் நிறுத்­தப்­ப­டு­வது சந்­தே­கத்­­துக்கிடமா­ன­தா­கவே இருக்­க­லாம்.

இந்த ஏது­நி­லையை முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னும் புரிந்­து­கொண்­டி­ருக்­கி­றார் என்­பதை அவர் நேற்று விடுத்த அறிக்கை புலப்­ப­டுத்­து­கின்­றது. எனி­னும் தான் நன்கு பற்­றிப் படர்ந்து செழித்­துப் பூக்­கக்­கூ­டிய ஒரு கொழு­கொம்பு கிடைக்­கா­த­தன் கார­ணத்­தால் அடுத்த தேர்­த­லி­லும் போட்­டி­யி­டு­வேன் என்­கிற அறி­விப்பை முத­ல­மைச்­சர் திட்­ட­வட்­ட­மாக வெளி­யி­ட­வில்லை. அதே­போன்று அப்­ப­டிப் போட்­டி­யி­டு­வ­தற்­குத் தனக்கு இருக்­கும் வாய்ப்­பைக் குலைத்­துக்­கொள்ள விரும்­பா­த­தன் கார­ணத்­தால் போட்­டி­யி­ட­மாட்­டேன் என்­றும் அவர் அறி­விக்­க­வில்லை.

தனது வெற்­றியைக் கிட்­டத்­தட்ட 100 வீதம் உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் அர­சி­யல் களம் தயா­ரா­கும் வரைக்­கும் அடுத்த தேர்­த­லில் போட்­டி­யி­டும் தனது முடிவை முத­ல­மைச்­சர் அறி­விக்­க­மாட்­டார் என்­றும் தோன்­று­கின்­றது. எனவே அடுத்து வரும் 6 மாதங்­க­ளில் வடக்கு அர­சி­யல் களம் வெகு சூடா­ன­தாக இருக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை.

தமி­ழர்­க­ளுக்கு விடிவு கிடைக்­கி­றதோ இல்­லையோ இவர்­கள் தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காக என்ற பெய­ரில் பத­வி­யைப் பிடிப்­ப­தற்­குப் போடப்­போ­கும் சண்­டை­க­ளால் சூடு, சுவை­யான பல­வற்­றை­யும் பார்க்­கும் வாய்ப்பு நிச்­ச­யம் தமி­ழர்­க­ளுக்­குக் கிடைக்­கும். எமது பிற­விப் பெரும் பயன் அது என்ற புள­காங்­கி­தத்­து­டன் காத்­தி­ருப்­போம்!

You might also like