கூட்டமைப்பின் குழப்பநிலை மக்களால் ஏற்க முடியாதது!!

தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­ னத்­துக்கு எதி­ராக வாக்­க­ளிப்­ப­தற்கு ரணில் விக்­கி­ர­ம­சி்ங்­க­வு­டன் கூட்­ட­மைப்­பால் உடன்­ப­டிக்கை எது­வும் செய்­யப்­ப­ட­வில்­லை­யென கூட்­ட­மைப்­பின் ஊட­கப் பேச்­சா­ள­ரான எம்.ஏ சுமந்­தி­ரன் தெரி­வித்­தள்­ளமை , மக்­கள் மத்­தி­யில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இது தொடர்­பாக கூட்ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்களும் குழப்­ப­ம­டைந்­தி­ருப்­ப­தா­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.
தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பான 10 கோரிக்­கை­களை ரணில் விக்­கி­ர­மசிங்­க­ வி­டம் சமர்ப்­பித்து, எழுத்து மூல­மான உறு­தி­மொ­ழியை அவ­ரி­ட­மி­ருந்து கூட்­ட­மைப்­புப் பெற்­றுள்­ள­தாக ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்ட நிலை­யில், சுமந்­தி­ர­னின் இந்த அறி­விப்பு வெளி­வந்­தமை குறிப்­பிடத்தக் கது.

தொடர்ந்து சிங்­கள தலை­மை­க­ளால் ஏமாற்­றப்­ப­டும் தமி­ழர்­கள்

தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் அவர்­கள் தொடர்ந்­தும் சிங்களத் தலைமைகளால் ஏமாற்­றப்­பட்டு வரு­கின்­ற­னர். சிங்­க­ளத் தலை­மை­கள் எழுத்து வடி­வில் உறு­தி­மொ­ழி­களை வழங்­கி­விட்­டுப் பின்­னர் அவற்­றைக் கிழித்து எறி­வது இந்த நாட்­டைப் பொறுத்த வரை­யில் புதி­ய­தொன்­றல்ல.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ரமசிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் இந்த நாட்­டின் அர­சி­ய­லில் மிக­வும் முக்­கி­ய­மானதொன் றாக நோக்­கப்­பட்­டது. இது வெற்­றி­பெ­று­மா­யின், நாட்­டின் ஆட்­சி­யில் பெரு­மாற்­றம் ஏற்­ப­டு­மென்ற பெரிய எதிர்­பார்ப்பு நில­வி­யது.ரணில் விக்­கி­ர­ ம­சிங்க தமது தலைமை அமைச்சர் பத­வி­யைத் துறந்து விடு­வ­தற்­கான சாத்­தி­ய­மும் அதி­க­ள­வில் காணப்­பட்­டது.

மகிந்த தரப்­பி­னர் ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தற்­கான பெரு­மு­னைப்­பில் இருந்­த­தால், எந்த வகை­யி­லே­னும் பிரே­ர­ணயை வெற்­றி­பெற வைக்க வேண்­டும் என்ற துடிப்­பு­டன் செயற்­பட்­ட­னர். அரச தலை­வர், தலைமை அமைச்­ச­ரைப் பதவி வில­கி­வி­டு­மாறு கேட்­டுக்­கொண்­ட­தன் பிர­கா­ரம் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வான சைகையை வெளிக்­காட்­டி­யிருந்தார்

நாட்­டில் ஓர­ளவு  சுமுக நிலை நில­வு­வதை மறுப்­ப­தற்­கில்லை

கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக நாட்­டில் ஒரு­சில சம்­ப­வங்­க­ளைத்­த­விர, அமைதி நில­வி­ய­தைக் காணக்­கூ­டி­ய­தா­க­வி­ருந்­தது. தமி­ழர் பிர­தே­சங்­க­ளில் முன்பு இருந்­த­தைப் போன்று படை­யி­ன­ரின் கெடு­பி­டி­க­ளும் காணப்­ப­ட­வில்லை. இத­னால் இங்­குள்ள மக்­கள் தமது அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­கள் தீராத நிலை­யி­லும், ஓர­ளவு நிம்­ம­தி­யு­ டன் வாழ்ந்து வரு­கின்­ற­னர்.

கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­த­னும், நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளிப்­ப­தற்கு இதையே கார­ண­மா­கக் கூறி­யி­ருந்­தார்.

கூட்­ட­மைப்­பின் ஆத­ரவு கிடைக்­கா­விட்­டா­லும் நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருக்­கும் என்­பதை இறுதி நில­வ­ரங்­கள் எடுத்­துக் காட்­டிய போதி­லும், அதன் ஆத­ரவு ரணில் விக்­கி­ரம­ சிங்­க­வுக்கு அர­சி­யல் ரீதி­யில் மிகப்­பெ­ரிய பலத்­தைக் கொடுத்­தி­ருந்­ததை, மறுத்­து­விட முடி­யாது. கூட்­ட­மைப்பு ஆத­ரவு தெரி­விக்க முன்­வந்­தமை ஏனைய சிறு­பான்­மைக் கட்­சி­க­ளுக்­கும் ஒர் உந்து சக்­தி­யாக இருந்­த­மை­யை­யும் மறுத்து விட முடி­யாது.

தீர்க்­கப்­ப­டாது தொட­ரும்  தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னை­கள்

போர் ஓய்ந்து பல வரு­டங்­கள் ஆகி­விட்ட போதி­லும் தமி­ழர்­க­ளின் வாழ்க்­கை­யில் தீர்க்­கப்­ப­ டாத பல பிரச்­சி­னை­கள் தொடர்ந்தவண்­ணமே உள்­ளன. இவற்­றுக்­குத் தீர்வு காணப்­ப­டு­மென அரச தலை­ வரும், தலைமை அமைச்­ச­ரும் வழங்­கிய உறு­தி­மொ­ழி­கள் நிறை­வேற்­றப்­ப­ட­வி்ல்லை.

மாறாக இறு­திப் போரின்­போது, போர்க்­குற்­றங்­க­ளி­லும்,மனித உரிமை மீறல்­க­ளி­லும் ஈடு­பட்­ட­வர்­க­ளைக் காப்­பாற்­று­கின்ற செயற்­பா­டு­களே இடம் பெறு­கின்­றன. படை­யி­னரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு­போ­துமே இணங்­கப் போவ­தில்­லை­யென அரச தலை­வர் பகி­ரங்­க­மா­கத் தெரி­வித்­து­விட்ட நிலை­யில், இது தொடர்­பாக அவ­ரி­டம் மேல­தி­க­மாக வேறு எதை­யும் எதிர்­பார்க்க முடி­யாது.

ஆனால் பெரும் இக்­கட்­டான நிலை­யில் இருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமி­ழர் பிரச்­சி­னை­யில் தலை­யிட்­டுத் தீர்வு காண வேண்­டிய கட்­டா­யத்­தில் இருந்­தார். இத­னால் அவர் கூட்­ட­மைப்­பின் கோரிக்­கை­க­ளுக்கு இணங்­கி­யி­ருப்­பா­ரென்ற நம்­பிக்கை தமி­ழர்­க­ளி­டம் காணப்­பட்­டது. ஆனால் சுமந்­தி­ர­னின் கருத்­துக்­கள் அந்த நம்­பிக்­கை­யைத் தகர்த்­தெ­றிந்­து­விட்­டன.

கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­க­ளுக்கு இதுவொரு நல்ல சந்­தர்ப்­பத்­தை­யும் வழங்கி விட்­டது. கூட்­ட­மைப்­பின் செயற்­பா­டு­க­ளால் மக்­கள் அதி­ருப்தி அடைந்­துள்­ள­தைக் கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் எடுத்­துக்­காட்­டி­விட்­டன. இதைச் சீர் செய்­ய­வேண்­டிய மிகப்­பெ­ரிய பொறுப்­பும் கூட்­ட­மைப்­புக்கு உண்டு.

தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பி்க்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நல்­ல­தொரு வாய்ப்பை வழங்­கி­யி­ருந்­தது.இதை நன்கு பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தால் ஒரு சில அனு­கூ­லங்­க­ளை­யா­வது பெற்­றி­ருக்க முடி­யும். ஆனால் அதை­யும் கூட்­ட­ மைப்பு தவற விட்­டுள்­ளது, என்றே கருத வேண்­டி­யுள்­ளது.

தமி­ழர்­க­ளின் தலை­யாய தலை­மைப் பொறுப்பை வகித்­து­வ­ரும் கூட்­ட­மைப்பு, நிலை­யான தீர்­மா­னங்­க­ளைச் சரி­யாக எடுக்­க­மாட்­டா­மல் தடு­மா­று­வதை மக்­கள் ஒரு­போ­துமே ஏற்க மாட்­டார்­கள் என்­ப­தைக் கூட்­ட­மைப்­பின் தலைமை புரிந்து கொள்ள வேண்­டும்.

You might also like