காணா­மல் போனோர் விட­யத்­தில் தவ­றி­ழைக்­கிறது இலங்கை அரசு!!

பல­வந்­த­மா­கக் காணா­மல் ஆக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­கான சட்ட மூலத்­தில் மிகப்­பெ­ரிய குறை­பா­டு­கள் காணப்­ப­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­ கின்­றது. இதனை இறு­திப்­போர் மற்­றும் கடந்த கால விட­யங்களுக் குப் பயன்­ப­டுத்த முடி­யாது என்­ப­தால் தமி­ழர்­கள் இந்­தச் சட்ட மூலம் தமக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக அமையாது என்றே நினைக்­கின்­ற­னர்.

இதே­வேளை காணா­மல் போன­வர்­கள் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­கென அமைக்­கப்­பட்ட அலு­வ­ல­கத்­துக்கு உறுப்­பி­னர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரிய வரு­கின்­றது. ஐ. நா.மனித உரி­மை­கள் சபை­யின் கூட்­டத்­தொ­டர் மிக அண்மையில் இடம்பெற்ற வேளையில் இந்த நிய­ம­னங்­கள் இடம் பெற்­றமை பலத்த சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ளது.

ஜெனி­வா­வைச் சமா­ளிப்­ப­தற்­கான அர­சின் ஏமாற்று வேலையே இது­வென காணா­மல் போன­வர்­க­ளின் உற­வி­னர்­கள் தெரி­விக்­கின்­ற­னர். எங்கு தேடி­யும் காணா­மல் போன­வர்­க­ளைக் கண்­ட­றிய முடி­ய­வில்­லை­ யென அரச தலை­வர் கைவி­ரித்­து­விட்ட நிலை­யில், இந்த நிய­ம­னங்­கள் தேவை­யற்­றவை என­வும் அவர்­கள் தெரி­விக்­கின்­ற­னர். இவற்­றை­யெல்­லாம் பார்க்­கும் போது அர­சின் கப­டத்­த­னம் தௌிவா­கப் புரி­கின்­றது.

காணா­மல் போன­வர்­க­ளைக் கண்­ட­றி­யும் விட­யத்­தில்
ஒப்புக்காகச் செயற்படும் அரசு

காணா­மல் போன­வர்­க­ளைக் கண்­ட­றிய நடவடிக்கை எடுப்பதாக அரச தலை­வர் உறு­தி­மொழி வழங்கி மூன்று ஆண்­டு­கள் கடந்­து­விட்ட நிலை­யில், வெறும் கண் துடைப்­புக் காகவும், உலக நாடு­களை ஏமாற்­று­வ­தற்­கா­க­வும் அரசு செயற்­ப­டு­கின்­றதோ என்ற ஐய­மும் கூடவே எழு­கின்­றது. காணா­மல் போன­வர்­கள் தொடர்­பான அலு­வ­ல­கத்­துக்கு தலை­வ­ரை­யும், ஏனைய உறுப்­பி­னர்­க­ளை­யும் நிய­மித்­ததை இலங்­கைக்­கான அமெ­ரிக்­கத் தூது­வர் வர­வேற்­றி­ருந்­தமை இதைத் தௌிவாக எடுத்­துக்­காட்டி விட்­டது.

ஜெனிவா சென்ற இலங்­கைத் தூதுக்­கு­ழு­வும் இதை­யொரு பெரிய விட­ய­மா­கக் காட்டி அரசின் மீதான அழுத்­தங்­க­ளைச் சமா­ளிக்க முயன்­றது. காணா­மல் போன­வர்­க­ளின் உற­வு­கள் எதிர்­கொள்­கின்ற துய­ரங்­க­ளுக்கு ஈடு இணை­யாக எதை­யும் கூறி­விட முடி­யாது.

தமது கண்­முன்­னால் தமது உற­வு­க­ளைத் தொலைத்­து­விட்டு நிற்­கின்ற இவர்­க­ளின் மனம் அரச தலை­வர் கூறி­ய­தைக் கேட்­ட­போது என்­ன­பா­டு­பட்­டி­ருக்­கும் என்­பதை நினைத்­துப் பார்க்­கவே நெஞ்­சம் பத­று­கின்­றது. இந்த நிலை­யில் வெறும் கண் துடைப்­புக்­காக அலு­வ­ல­கம் அமைத்து, அதற்கு அலு­வ­லர்­க­ளை­யும் நிய­மிக்­கும் சமா­ளிப்பு நாட­கத்தை அவர்­க­ளால் எவ்­வாறு ஏற்­றுக் கொள்ள முடி­யும்?

காணா­மல் போன­வர்­க­ளில் பலர் தத்­தம் வீடு­க­ளில் வைத்­துப் படை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்­டுக் கொண்டு செல்­லப்­பட்­டி­ருக்­கி­றார்­கள். இதை­விட இறு­திப் போரின்­போ­தும் அதற்­குப் பின்­ன­ரும் பலர் காணா­மல் போயி­ருக்­கின்­ற­னர். போர் உச்­சக்­கட்­டத்தை எட்­டிய போது இரா­ணு­வக் கட்­டுப்­பாட்­டுப் பகு­திக்­குள் சென்ற பல­ரது நிலை தொடர்­பா­க­வும் இது­வரை எதுவித தகவலும் தெரி­ய­வில்லை.

இதை­வி­டப் படை­யி­ன­ரி­டம் சர­ண­டை­யச் சென்ற போரா­ளி­க­ளில் பல­ரைப் படை­யி­னர் தமது வாக­னங்­க­ளிள் ஏற்­றிச் சென்­றி­ருக்­கி­றார்­கள். இவர்­கள் தொடர்­பா­க­வும் எது­வுமே தெரி­ய­வ­ர­வில்லை. இவ்­வாறு பல்­வேறு நிலை­க­ளில் பலர் காணா­மல் போயுள்­ள­னர். இவர்­கள் அனை­வ­ரை­யும் தேடி அவர்­க­ளது உற­வு­கள் அலைந்து கொண்­டி­ருக்­கின்­ற­னர். தமது உற­வு­கள் எங்கோ ஓரி­டத்­தில் உயி­ரு­டன் இருப்­ப­தா­கவே அவர்­கள் நம்­பு­கின்­ற­னர். இந்த நம்­பிக்­கையே அவர்­களை உயி­ரு­டன் வாழ­வைத்­துக் கொண்­டி­ருக்­கின்­றது.

போரின் வடுக்­க­ளால் பாதிக்­கப்­ப­டாத தமி­ழர்­கள் இங்கு இல்­லை­யென்­று­தான் கூற வேண்­டும். ஒவ்­வொரு தமி­ழ­னும் ஏதோ­வொரு விதத்­தில் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றான். ஆனால் எந்­த­வொரு தமிழ்க் குடி­ம­க னுக்கும் பாதிப்பு ஏற்­ப­டாத வகை­யில் தாம் போரை நடத்தி வெற்றி கொண்­ட­தாக மகிந்த ராஜ­பக்ச கூறிக் கொண்­டி­ருக்­கி­றார்.

அவர் சொல்­வது உண்­மை­யாக இருந்­தால், முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் மட்­டும் மீள்­கு­டி­ய­மர்ந்த குடும்­பங்­க­ளில் 6 ஆயி­ரத்து 246 பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளும், 2 ஆயி­ரத்து 291 மாற்­றுத் திற­னா­ளி­க­ளும் எவ்­வாறு காணப்­ப­டு­கின்­ற­னர் என்­ப­தற்கு விடை தெரி­ய­வில்லை. இதைப்­போன்று ஏனைய தமி­ழர் பிர­தே­சங்­க­ளி­ன­தும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

ஏற்­க­னவே காணா­மல் போன­வர்­கள் தொடர்­பான விசா­ர­ணை­கள் இடம்­பெற்ற நிலை­யில் புதிய விசா­ர­ணை­களை மேற்கொள்வது காலத்­தைக் கடத்­து­கின்­ற­தொரு உத்­தி­யா­கவே கரு­த­மு­டி­கின்­றது.

காணா­மல் போன­வர்­க­ளின் விட­யத்­தில் அரசு இனி­யும் மெத்­த­னப் போக்­கு­டன் செயற்­ப­டு­வது நல்­ல­தல்ல. அமெ­ரிக்கா உள்­ளிட்ட பிர­தான நாடு­கள் இந்த விட­யத்­தில் அதிக அக்­கறை கொள்ள ஆரம்­பித்­து­விட்­டன. ஐ.நா.மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரின் இலங்­கைக்கு எதி­ரான கடு­மை­யான அறிக்­கையை எவ­ருமே எளி­தில் புற­மொ­துக்­கி­விட முடி­யாது.

கடி­ன­மா­ன­தொரு கால­கட்­டத்தை இலங்கை எதிர்­கொள்­ளப்­போ­வதை இப்­போதே அனு­மா­னிக்க முடி­கின்­றது. காணா­மல் போன­வர்­கள் தொடர்­பான விட­ய­மும், படை­யி­ன­ரால் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் போர்க் குற்­றங்­கள் மற்­றும் மனித உரிமை மீறல்­கள் தொடர்­பான விட­ய­மும் இலங்­கை­யைக் குற்­ற­வா­ளிக் கூண்­டில் நிறுத்த வல்­லவை.

You might also like