குடாக்கடலில் இரு மீனவர்கள் மாயம்!!

யாழ்ப்பாணம் குருநகர் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளனர் என்று அவரது உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். இதுவரையில் அவர்கள் கரைக்குத் திரும்பவில்லை என்று தெரிவிக்்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் சென்ற படகு மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இருவர் தொடர்பில் இதுவரையில் எந்த தகவல்களும் வெளிவரவில்லை.

You might also like