யாழ்.மாநகர சபையின்   கன்னி அமர்வு ஆரம்பம்!!

யாழ்.மாநகர சபையின் கன்னியமர்வு சபை கேட்போர் கூடத்தில் இன்று காலை ஆரம்பமாகியது. யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும், மாநகர வாசலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சபைக்கு சம்பிரதாய பூர்வமாக அழைத்து வரப்பட்டனர். யாழ்.மாநகர சபை உத்தியோகத்தர்கள், அனைத்து உறுப்பினர்களுக்கும் மலர் அணிவித்து கௌரவித்தனர் அதன்பின்னர், சபை யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் அமர்வு ஆரம்பமானது.