புத்தாண்டுக்கு புதிய நாணயத்தாள்கள்!!

கிறுக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களுக்கு பதிலாக புதிய நாணயத்தாள்களை வழங்கும் நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளது.

வழங்கப்பட்ட கால எல்லைக்குள் மத்திய வங்கி உள்ளிட்ட வணிக வங்கிகளுக்கு கிடைத்த சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்களுக்கு பதிலாக புதிய நாணயத்தாள்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்று இலங்கை மத்திய வங்கியின் வர்த்தக நிதி திணைக்களத்தின் அதிகாரி தீபா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்களின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை. சிறிய கீறல்களுடனான நாணயதாள்களை தொடர்ந்தும் கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படுத்த முடியும்.

அதேவேளை எதிர்வரும் புத்தாண்டில் அனைவரது கைகளிலும் புதிய நாணயத்தாள்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கின்ாறம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

You might also like