கிண்ணியா நகர சபை ஐ.தே.க. வசம்!!

கிண்ணியா நகர சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் எஸ்.எச்.எம் நளீம் தெரிவு செய்யபட்டுள்ளார்.

தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவுக்கான ஆரம்ப அமர்வு இன்று நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதில் அதிக வாக்குகளால் நளீம் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல சபைகளில் ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துனர்வுக்கமைய புதிய தவிசாளர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றமை குறி்ப்பிடத்தக்கது.

You might also like