கழிவுகள் அழிப்பு!!

களுவாஞ்சிகுடி கடற்கரையை அண்டிய பகுதியில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் சேகரிக்கப்பட்ட கழிவுகள் ஜே.சி.பி. இயந்திரத்தினால் புதைத்து துப்பரவு செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

பொதுமக்களும் உக்கும் கழிவுகள், உக்காத கழிவுகள், என்பவற்றை வெவ்வேறாக பிரித்து வைத்தால் அவற்றை பிரதேச சபையால் அகற்றுவதற்கு இலகுவாக அமையும் என்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோறாஜ் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதானால் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாக அப்பகுதி மக்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like