‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரிலுக்கு திருமணம்!!

சில மாதங்களுக்கு முன்பு, இணையத்தைக் கலக்கிய ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். ஷெரில் தற்போது கேரளாவைச் சேர்ந்த மணமகனைக் கரம்பிடிக்கவுள்ளார்.

‘ஜிமிக்கி கம்மல்’ புகழால் பல நிகழ்ச்சிகளில் விருந்தினராகவும் கலந்து கொண்டு ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு அசத்தினார் ஷெரில். இந்தநிலையில், ஷெரிலுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

ஷெரிலுக்கும் கேரளாவைச் சேர்ந்த ப்ரஃபுல் டோமி அமம்துருத்தில் என்பவருக்கும் சமீபத்தில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. மாப்பிள்ளை டோமி கேரளாவின் தொடுப்புழா பகுதியைச் சேர்ந்தவர். தமிழ், மலையாள சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்த போதும் மறுத்த ஷெரில், விரைவாக திருமணம் செய்துகொள்வது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

You might also like