18 வயதுப்பிரிவிலும்  பற்றிக்ஸ் சம்பியன்!!

யாழ்ப்பாணம் கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத்தில் 18 வயதுப் பிரிவிலும் கிண்ணம் வென்றது யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி.

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மோதியது.

நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களில் இரண்டு அணிகளாலும் கோலெதுவும் பதிவாகவில்லை. சமநிலைத் தவிர்ப்பு  உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 5:3 என்ற கோல் கணக்கில் யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றது.

 

You might also like