பச்சிலைப்பள்ளி குப்பைகள் கொட்டும் இடம் ஆராய்வு!!

பச்­சி­லைப்­பள்­ளி­யில் குப்பை கொட்­டு­மி­டத்­தின் தற்­போ­தைய நிலை தொடர்­பாக நேரில் சென்று பார்­வை­யிட்­ட­னர் பச்­சி­லைப்­பள்ளி தவி­சா­ளர் உள்­ள­டங்­கிய குழு­வி­னர்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பச்­சி­லைப்­பள்­ளிப் பிர­தேச சபைக்கு உட்­பட்ட பகு­தி­க­ளில் சேகரிக்கப்படுகின்ற குப்­பை­கள் அல்­லிப்­பளை பகு­தி­யில் கொட்­டப்­பட்டு வரு­கின்­றன. ஆனால் அங்கு அவை சரி­யான முறை­யில் பரா­ம­ரிக்­க­ப­டாத கார­ணத்­தால் பல்­வேறு சிர­மங்­களை கிராம மக்­கள் எதிர்­கொண்­ட­னர். இத­னால் அங்கு குப்­பை­களை கொட்­டு­வ­தற்கு தமது எதிர்ப்­புக்­களை தெரி­வித்­தி­ருந்­த­னர்.

இது தொடர்­பாக பிர­தேச சபை அமர்­வில் முடிவு எடுக்­கப்­ப­டும் என பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செய­லா­ளர் தெரி­வித்­தி­ருந்­தார். இந்த நிலை­யில் இது தொடர்­பாக பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச சபை அமைக்­க­ப்பட்ட நிலை­யில் பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் மற்­றும் உப­த­வி­சா­ளர் மற்­றும் சில உறுப்­பி­னர்­கள் நேர­டி­யாக சென்று பார்­வை­யிட்­ட­து­டன் இது தொடர்­பாக அரு­கில் இருந்­த­வர்­க­ளி­டம் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­னர்.

இது தொடர்­பாக பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் சு.சுரே­னி­டம் கேட்­ட­போது, ‘‘குறித்த பகுதி பாது­காப்பு இல் லாத நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது சுற்று வேலி­கள் அமைத்து அன்­றா­டம் கொட்­டப்­ப­டு­கின்ற குப்­பை­களை அவற் றின் தரத்­திற்கு ஏற்ப அன்­றைய தினமே அழிக்­கும் நட­வ­டிக்­கை ஆரம்பிக்கப்படவுள்ளது’’ என்று தெரி­வித்­தார்.

You might also like