வானூர்தி விபத்து 100 பேர் உயிரிழப்பு!!

அல்ஜீரிய தலைநகருக்கருகில் இராணுவ வானூர்தி வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்த 100க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வானூர்தியில் சுமார் 200 பேர் பயணித்தனர் என்று அல்ஜீரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்ஜீரிய தலைநகரிலிருந்து சுமார் 30 கிலோ மீற்றர் தொலைவில் பௌபாரிக் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வானூர்தி புறப்பட்ட சிறிது நேரத்திலியே விழுந்துள்ளதாக பன்னாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You might also like