ஆர்யாவின் அடுத்த நிகழ்வு!!

தமிழ் திரையுலகதின் முன்னனி நடிகர்களில் முக்கியமான ஆர்யா, தனக்கு பெண் தேடுவதாகவும் , விருப்பமுள்ளவர் தொடர்பு கொள்ளவும் என்று தனது அலைபேசி எண்ணை கீச்சகத்தில் பதிவிட்டு இருந்தார். முதலில் ஆர்யா இதை விளையாட்டுக்காக செய்வதாக அனைவரும் நினைத்தனர்.

ஆனால், அவர் உண்மையாகவே பெண் தேடும் முயற்சியில் இருப்பதாகவும், அவரை வைத்து ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்வைப் பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுத்து வழங்கி வருகிறது.

இதற்கு மாதர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்த போதும், இந்த நிகழ்ச்சி எந்த இடையூறுமின்றி நடந்து வருகிறது. மொத்தம் 16 பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் தற்போது 3 பெண்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இறுதிச்சுற்றுக்கு முன்பாக மெகந்தி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியில் பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி, கயல் ஆனந்தி, கிகி விஜய், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இறுதிப் போட்டியாளர்களான சீதா லட்சுமி, சூசானா, அகதா ஆகியோர் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like