போராட்ட உணர்வு இங்கு தேய அங்கு வளர்­கி­றது!

காவிரி நதி நீரைத் தமி­ழ­கத்துக்குத் தந்­தே­யா­க­வேண்­டும் என்­கிற போராட்­டம் அங்கு தீவி­ர­ம­டைந்­தி­ருக் கி­றது. அந்­தப் போராட்­டத்­தின் அடர்த்தி கார­ண­மாக ஐ.பி.எல். எனப்­ப­டும் இந்­தி­யன் பிரி­மி­யர் லீக் கிரிக்­கெட் ஆட்­டங்­களை சென்­னை­யில் நடத்­து­வது கேள்­விக்­கு­றி­யா­கி­யி­ருக்­கி­றது.

ஆட்­டங்­களை வேறு மாநி­லத்­திற்கு மாற்­று­வது குறித்து, குறிப்­பா­கக் கேர­ளா­விற்கு மாற்­று­வது குறித்து ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது.

காவிரி நதி நீர் இந்­தி­யா­வின் கர்­நா­டக மாநி­லத்­தில் உற்­பத்­தி­யா­கின்­றது. அதனை கர்­நா­டகா, தமி­ழ­கம், கேரளா ஆகிய மாநி­லங்­க­ளுக்­கும் புதுச்­சேரி ஒன்­றி­யத்­திற்­கும் பங்­கி­ட­வேண்­டி­யி­ருக்­கின்­றது.

1892ஆம் ஆண்­டி­லி­ருந்து இந்­தப் பிரச்­சினை தொடர்­கி­றது. அவ்­வப்­போது பேச்சு நடத்தி ஒப்­பந்­தங்­க­ளும் செய்­து­கொள்­ளப்­பட்­டன. என்­றா­லும் பிரச்­சினை தொடர்ந்­து­கொண்டே இருக்­கின்­றது.

காவிரி நதி நீரை நம்பி விவ­சா­யம் இடம்­பெ­றும் பகுதி தமிழ் நாட்­டில்­தான் அதி­கம் உள்­ளது. கர்­நா­ட­கத்­தில் அதன் அரை­வா­சிப் பகு­தி­ய­ள­வான விவ­சாய நிலங்­களே இருக்­கின்­றன.

இத­னால் தமிழ்­நாட்­டுக்கு அதி­க­ளவு தண்­ணீ­ரைத் திறந்­து­ வி­ட­வேண்­டி­யி­ருக்­கி­றது. ஆனால், தங்­க­ளது மாநி­லத்­தில் உற்­பத்­தி­யா­கும் காவிரி நதி நீரை மற்­றைய மாநி­லங்­க­ளுக்­குத் தர­மு­டி­யாது என்று கர்­நா­டகா வாதி­டு­கின்­றது. இதுவே பிரச்­சி­னை­யின் அடித்­த­ளம்.

ஒவ்­வொரு முறை­யும் பேச்சு, நடு­வர் மன்­றம் என்று சென்று அவற்­றால் ஒழுங்­கான தீர்வு கிடைக்­க­வில்லை என்­ற­தும் தமி­ழ­கம் இந்­திய உச்ச நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தாக்­கல் செய்து நீதி கேட்­ப­தும் வழக்­க­மாக இருந்­தது.

கடை­சி­யாக இந்த ஆண்டு உச்ச நீதி­மன்­றம் வழங்­கிய தீர்ப்பு இரு மாநில அர­சு­க­ளுக்­கும் ஏற்­பு­டை­ய­தாக இல்­லா­த­போ­தும் அந்­தத் தீர்ப்பை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு தமி­ழ­கத்தில் உள்ள மக்­கள் வலி­யு­றுத்­து­கின்­ற­னர். இதுவே தற்­போ­தைய போராட்­டத்­திற்­கான அடிப்­படை.

தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் தொடர்ந்து நடந்­து­வ­ரும் இந்­தப் போராட்­டத்தை மக்­கள் இயக்­கங்­க­ளும், எதிர்க் கட்­சி­க­ளும் தொடர்ந்து முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றன. அதன் உச்­சக்­கட்­ட­மா­கவே நேற்­று­முன்­தி­னம் சென்னை, சேப்­பாக்­கம் கிரிக்­கெட் மைதா­னத்­தில் நடை­பெற்ற ஆட்­டத்­தைக் குழப்­பும் விதத்­தி­லான போராட்­டங்­கள் முன்­னெ­டுக்­கப் பட்­டன. அவை மிகப் பெரு­ம­ள­வில் பய­ன­ளித்­துள்­ளன என்றே தெரி­கி­றது.

காவிரி நதி நீர்ப் பிரச்­சி­னை­யைக் கையாள்­வ­தற்­கான காவிரி மேலாண்மை வாரி­யத்தை அமைக்க வேண்­டும் என்­றும் அத­னைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான கால வரை­ய­றை­யை­யும் அது எப்­ப­டிச் செயற்­ப­டும் என்­ப­தை­யும் மைய அரசு அறி­விக்­க­வேண்­டும் என்­றும் இந்­திய உச்ச நீதி­மன்­றம் கூறி­யி­ருந்­தது.

அத­னைச் செய்­யா­மல் இழுத்­த­டித்­து­வ­ரும் இந்­திய மைய அரசை அசைக்­க­வேண்­டு­மா­யின் தேசிய அள­வில் நடந்­து­வ­ரும் பணம் கொழிக்­கும் கிரிக்­கெட் ஆட்­டத்தை அசைக்­க­வேண்­டும் என்­ப­தையே அவர்­கள் தமது போராட்­டப் பாட­மா­கக் கொண்டு நகர்ந்­தி­ருக்­கி­றார்­கள்.

அண்­மைக்­கா­ல­மாக தமி­ழ­கம் இந்த வகை­யில் ஜன­நா­யக ரீதி­யான போராட்­டங்­களை மிக உத்­வே­கத்­து­டன் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. ஜல்­லிக்­கட்­டுப் போராட்­டத்­தின் முன்­னும் பின்­னு­மாக இவற்­றைப் பார்க்­க­லாம்.

அதே நேரத்­தில் 30 ஆண்­டு­க­ளாக உரி­மைப் போராட்­டத்­தின் உச்­சத்­தில் இருந்து வந்த ஈழத் தமி­ழர்­க­ளா­கிய நாம், அடை­யா­ளப் போராட்­டங்­கள் என்­கிற வகை­ய­றாக்­க­ளுக்­குள் முடங்­கிப் போய்­விட்­டோமோ என்­கிற சந்­தே­கம் எழு­கி­றது.

அர­சு­களை அசைத்­துப் பார்க்­காத, அவற்­றுக்கு இடைஞ்­சல் கொடுக்­காத நீண்ட நாள் போராட்­டங்­க­ளுக்­கும், சில பல நிமி­டங்­கள் மட்­டுமே நீடிக்­கும் சுருக்­கப் போராட்­டங்­க­ளுக்­கும் பழ­கி­விட்­டோம் போலத் தோன்­று­கின்­றது.

தமி­ழ­கம் தண்­ணீ­ரைப் பெறு­வ­தற்­கா­கத் தீவி­ர­மா­கப் போரா­டு­கின்­றது. நாமோ தண்­ணீர் பெய­ரில் வந்து விழும் திட்­ட­மிட்ட இனக்­கு­டி­யேற்­றங்­களை எதிர்த்து ப்போராட்­டம் போன்­ற­ஒன்­றைப் பெய­ருக்­குச் செய்­து­விட்டு கடன் கழிந்­தது என்று விட்­டு­வி­டு­கின்­றோம்.

எம் போராட்­டக் குணம் வர­வர மங்­கிக்­கொண்டே போகி­றதா? அல்­லது தமி­ழ­கத்­தில் அந்­தக் குணம் வீறு­கொண்டு எழுந்து வரு­கின்­றதா? காலம்­தான் பதில் சொல்­ல­வேண்­டும்.

You might also like