கிளிநொச்சியில் புத்தாண்டு நிகழ்வுகள்!!

இனங்­க­ளிற்கு இடை­யில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் தமிழ் சிங்­கள புத்­தாண்டு நிழ்­வு­கள் கிளி­நொச்­சி­யில் நேற்று இடம்­பெற்­றன.
கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உள்ள 57ஆவது படைப் பிரி­வி­ன­ரின் ஏற்­பாட்­டில் இந்த நிகழ்வு இடம்­பெற்­றது. கிளி­நொச்சி மத்­திய மகா­வித்­தி­யா­லய மைதா­னத்­தில் நிகழ்­வு­கள் இடம்­பெற்­றன.

காலை 9.30 மணி­ய­ள­வில் சம்­பி­ர­தாய பூர்­வ­மாக ஆரம்­ப­மான நிகழ்­வில் கிளி­நொச்சி படை­க­ளின் கட்­டளை அதி­கா­ரி­யாக செயற்­பட்டு பதவி உயர்வு பெற்று இட­மா­ற் றம் பெற்­றுச் செல்­ல­வுள்ள மேஜர் ஜென­ரல் அஜித் காரிய கர­வண்ண முதன்மை விருந்­தி­ன­ராகச் கலந்து கொண்­டார்.

சர்வ மத பிரார்த்­த­னை­க­ளு­டன் ஆரம்­ப­மான குறித்த நிகழ்­வில் விளை­யாட்­டுக்­கள், கலை நிகழ்­வு­கள் உள்­ளிட்­டவை இடம்­பெற்­றன. போட்­டி­யில் வெற்றி பெற்­ற­வர்­க­ளிற்­கான பரி­சில்­க­ளும் வழங்கி வைக்­கப்­பட்­டன.

You might also like