கிளி­நொச்சி மாவட்­டத்­தில் கட்­டாக்­காலி நாய்­க­ளின் தொல்லை அதி­க­ரிப்பு!!

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் கட்­டாக்­காலி நாய்­க­ளின் தொல்லை அதி­க­ரித்து காணப்­ப­டு­வ­தாக பிர­ஜை­கள் குழு­வால் தெரி­விக்­கிப்­ப­டு­கின்­றது.

கிளி­நொச்சி மாவட்ட அபி­வி­ருத்­திக்­குழு கூட்­டம் இணைத்­த­லை­வர்­க­ளான வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன், இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிவ­ஞா­னம் சிறீ­த­ரன் மற்­றும் அங்­க­யன் இரா­ம­நா­தன் தல­மை­யில் அண்­மை­யில் இடம்­பெற்­றது.

இதில் பிர­ஜை­கள் குழு சார்­பாக கலந்­து­கொண்ட நபர் கிளி­நொச்சி மாவட்­டத்­தில் கட்­டாக்­காலி நாய்­க­ளின் தொல்லை அதி­க­ரித்து காணப்­ப­டு­வ­தா­க­வும் அது வீதி­யால் செல்­ப­வர்­களை கடித்து காயத்தை ஏற்ப­டுத்­து­வ­தா­க­வும் இதனால் பாட­சாலை மாண­வர்­கள் பாட­சாலை செல்­வ­தற்கு பயப்­ப­டு­கின்­ற­னர் என்றும் தெரி­வித்­தார்.

2016ஆம் ஆண்டு நாய்க்­கடி கார­ண­மாக 5 ஆயி­ரத்து 633 பேரும் 2017 ஆம் ஆண்டு 11ஆயி­ரத்து 800 பேரும் 2018ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் வரை 789 பேரும் மாவட்ட வைத்­தி­ய­சா­லை­க­ளில் நாய் கடித்து சிகிச்சை பெற்­றுள்­ள­தா­க­வும் இதனை கட்­டுப்­ப­டுத்த உரி­ய­வர்­கள் கவ­னத்­தில் எடுத்து செயற்ப்­பட வேண்­டும் என­வும் கோரிக்கை விடுத்­தார்.

நாய்­களை பிடித்து கொல்­லு­வ­தற்­கான சட்­டம் தற்­போது இல்லை என­வும் பிடிக்­கின்ற நாய்­களை பரா­ம­ரிக்க வேண்­டும் அவ்­வாறு பரா­ம­ரிப்­ப­தற்குப் பிர­தேச சபை­க­ளி­டம் இட­வ­சதி இல்லை என தெரி­விக்­கப்­பட்டு இது தொடர்­பாக உரி­ய­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி தீர்­வினை பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­க­ப­டும் என்­றும் சுகா­ தா­ரத்­து­றை­யி­னர் தெரி­வித்­தனர்.

You might also like