10 ஆயிரம் பாடசாலைகளை மூடுகிறது சவுதி அரேபியா!!

நாட்டில் இயங்கும் சுமார் 10 ஆயிரம் பாடசாலைகளை அடுத்த கல்வியாண்டில் மூடுவதற்கு சவுதி அரேபியாவின் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தத் தகவலை ‘த நிவ் கலீஜ்’ எனும் சவுதி இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டில் கல்வியமைச்சு நாட்டில் இயங்கும் பாடசாலைகள் பற்றிய கணிப்பீடொன்றை மேற்கொண்டது. அதில் அநேகமான பாடசாலைகள் 20 மாணவர்களுடனும், 6 ஆசிரியர்களுடனும் இயங்குவது கண்டறியப்பட்டது.

இவற்றைப் பராமரிப்பதற்கு வருடாந்தம் 2 இலட்சம் சவுதி ரியால்கள் செலவாகின்றன. அதேவேளை, நாட்டிலுள்ள 24 ஆயிரம் அரச பாடசாலைகளில் 9ஆயிரத்து 553 பாடசாலைகளில் 100 க்கும் குறைவான மாணவர்களே கற்கின்றனர்.

இந்தப் பாடசாலைகளை அடுத்த வருடம் மூடுவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது. அரச செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்கே அரசு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

You might also like