நுண்கடன்களால் மக்கள் அவதி – பின்னனியில் அரசு!!

நுண் கடன்களை வழங்கி வரும் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை முற்று முழுதாக தடுத்து நிறுத்த முடியாமைக்குப் அரசியல் பின்னணியே காரணமாக இருக்கலாம் என்று வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2018 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது ஆலோசனைக் குழுக்கூட்டம் மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

அதில் அவர் தெரிவித்ததாவது,

நுண் கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனங்கள், குடும்பங்களில் உள்ள பெண்களை இலக்கு வைத்து அவர்களைக் கடன் சுமைக்குள் தள்ளுகின்றன.

இதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் போதிலும், கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை முற்றிலும் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது.

இந்த நிறுவனங்களின் பின்னணியில் இருக்கும் அரசியல் பின்புலமே இதற்குக் காரணாமாக இருக்கலாம் என்ற ஐயப்பாடு ஏற்படுத்துகிறது என்றார்.

கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர்களான ப.அரியரட்ணம்,
கே.ரி.லிங்கநாதன், ஆர்.ஜெயசேகரம் மற்றும் அ.பரஞ்சோதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

You might also like