மின்னல் தாக்கும் அபாயம்!!

நாட்டின் சில குறிப்பிட்ட மாகாணங்களில் மின்னல் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் , மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் கடும் மழையுடன் இடி மின்னல் தாக்கம் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலியிலிருந்து அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன் இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் . எனவே இடி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like