ராஜி­த­வின் கருத்து வர­வேற்­கத்­தக்­கது!

வழக்­குத் தாக்­கல் செய்­யப்­ப­டா­மல் உள்ள அர­சி­யல் கைதி­கள் விடு­விக்­கப்­பட வேண்­டும் என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் அமைச்­சர் ராஜித.

காணி­கள் விடு­விக்­கப்­பட வேண்­டும், அர­சி­யல் கைதி­கள் தொடர்­பான வழக்­கு­கள் துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்­டும், காணா­மற்­போ­னோர் பிரச்­சி­னைக்­குத் தீர்வு வேண்­டும் என்­ப­னவே கூட்­ட­மைப்­பின் கோரிக்­கை­கள். இவை நீண்­ட­நாள் பிரச்­சி­னை­கள்.

இவை உண்­மை­யில் விரை­வு­ப­டுத் தப்பட வேண்­டும் என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார் அவர்.
அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் செய்­தி­யா­ளர் சந்­திப்பு, அரச தக­வல் திணைக்­க­ளத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது.

அதில் கலந்­து­கொண்ட அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ளர் ராஜித, ‘தலைமை அமைச்­ச­ருக்கு ஆத­ர­வ­ளிக்க கூட்­ட­மைப்­பால் நிபந்­தனை எது­வும் விதிக்­கப்­பட்­டதா?’ என்ற கேள்­விக்­குப் பதில் வழங்­கு­கை­யி­லேயே, கன­தி­யான இந்­தக் கருத்தை வெளி­யிட்­டுள்­ளார்.

சிங்­கள பேரி­ன­வா­தத் தலை­வ­ரொ­ரு­வ­ரி­டம் இருந்து இவ்­வா­றான கருத்து வெளிப்­ப­டு­வது சிறப்­பா­னது. அது­வும் அமைச்­ச­ர­வை­யின் பேச்­சா­ளர் என்ற அடிப்­ப­டை­யில் ஓர் உத்­தி­யோ­க­பூர்வ நிகழ்­வில் வைத்து அவர் இவ்­வாறு தெரி­வித்­தி­ருப்­பது கன­தி­யா­னது; மெச்சத்­தக்­கது, வர­வேற்­கத்­தக்­கது.

இதை அமைச்­ச­ர­வை­யின் நிலைப்­பா­டா­க­வும் அல்­லது அதன் கருத்து வெளிப்­பா­டா­க­வும்­கூட எடுத்­துக் கொள்­ள­லாம்.

ஏவி­ளம்பி வரு­டத்தை வர­வேற்றபோது, தமி­ழர் தாய­கத்­தி­டம் இருந்த கோரிக்­கை­கள் அதன் இறுதி நாளான இன்­றும் தேக்க நிலை­யு­டன் அப்­பி­டி­யே­தான் இருக்­கின்­றன.

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் தொடர்­பி­லான நிலைப்­பா­டு­கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லைக்கு காத்­தி­ர­மான நகர்­வு­கள் முன்­னெ­டுக்­கப் பட­வில்லை.

காணி விடு­விப்­புக்­கள் எதிர்­பார்க்­கப்­பட்­ட­தைப்­போன்று அமை­ய­வில்லை. பௌத்த மய­மாக்­க­லும், திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளும் நிறுத்­தப்­ப­ட­ வில்லை. இவ்­வா­றாக முற்­றி­லும் ஏமாற்­ற­ம­டைந்த நிலை­யி­லேயே தமி­ழர் தாய­கம் ஏவி­ளம்­பிக்கு விடை­கொ­டுத்து விளம்­பியை எதிர்­கொள்­கி­றது.

இன்­னும் சொல்­லப்­போ­னால், ஏவி­ளம்­பியை வர­வேற்­ற­போது, தமக்­கு­ரிய தீர்வு விட­யத்­தில் தமி­ழர் தாய­கத்­தி­டம் துளிர்த்­துப் போயி­ருந்த சிறு நம்­பிக்கை, விளம்­பியை எதிர்­கொள்­ளும்­போது இல்­லவே இல்லை. அண்­மை­யில் நடந்­து­மு­டிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லும், அதன் பின்­னர் தலைமை அமைச்­சர் ரணில் – அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான கூட்டு அர­சுக்­குள் ஏற்­பட்ட பிடுங்­குப்­பா­டு­க­ளும், தமி­ழர்­க­ளின் கோரிக்­கை­கள் மட்­டில் அதி­லும் குறிப்­பாக, புதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் மிகப்­பெ­ரும் பின்­ன­டை­வைக் கொடுத்­துள்­ளது.

இவ்­வா­றி­ருக்க ராஜித வெளிப்­ப­டுத்­தி­யுள்ள கருத்­துக்­கள் தமி­ழர்­களை சிறி­தா­வது ஆற்­றுப்­ப­டுத்­த­வல்­லவை என்­ப­தில் மாற்­றுக் கருத்­துக்கு இட­மில்லை.
ஆனால், ராஜி­த­வி­டத்­தில் உள்ள கருத்து வெளிப்­பாடு, சிங்­கள பேரி­ன­வாத அர­சி­யல் பிர­தி­நி­தி­கள் மட்­டில் உதிக்­காத வரை­யில், இந்­தத் தீவில் உள்ள சிறு­பான்மை இனங்­க­ளுக்கு விமோ­ச­னம் என்­பது சாத்­தி­யம் அற்ற ஒன்றே.

‘வடக்கு – கிழக்கு இணைந்­தால் தமி­ழர் தாய­கம் உரு­வா­கும்’, ‘புதிய அர­ச­மைப்பு உரு­வா­னால் நாடா­ளு­மன்­றத்தை விட­வும் மாகாண சபை­கள் கூடு­தல் அதி­கா­ரம் பெற்­றுத் திக­ழும், அது தமி­ழர் தாய­கம் உத­ய­மாக வழி­ச­மைக்­கும்.

இதற்­கா­கவா எமது சிப்­பாய்­கள் தத்­த­மது இன்­னு­யி­ரைத் தியா­கம் செய்­த­னர்’ இவை அண்­மை­யில் முடி­வ­டைந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் மகிந்­த­வி­டம் இருந்து வெளிப்­பட்ட கருத்­துக்­கள்.

இவை­தான் பதி­லா­க­வும் அமை­கின்­றன விளம்­பி­யி­லா­வது விடிவு கிடைக்­குமா என்­கிற கேள்­விக்கு.

ஆக, இந்த நாட்டு அர­சி­ய­லு­டன் இன­வா­தம் இரண்­ட­றக் கலந்­துள்ள நிலை நீங்­காத வரை­யில், சிறு­பான்மை மக்­கள் தெரு­வி­லே­தான். நடந்து முடிந்­துள்ள குரு­திச் சக­திக்­கும் அது­வே­தான் கார­ணம்.

You might also like