விபத்தில் இருவர் சாவு ; 9 பேர் காயம்

வெலிகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

காட்டு யானை ஒன்று வீதியின் குறுக்காக சென்றபோது, பயணித்துக்கெண்டிருந்த பாரவூர்தி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கெப் ரக வாகனத்துடன் பின்னால் சென்று மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தாண்டை கொண்டாடுவதற்கு உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வத்தளை பிரதேசத்தினை சேர்ந்த இருவரே சாவடைந்தனர். காயமடைந்த 2 பேர் வெலிகந்த பிரதேச மருத்துவமனையிலும், ஏனைய 7 பேர் பொலன்னறுவை மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like