மகாலட்சுமி

நல் அமுதத்தின் பான்மை கொண்ட அருளின் திருமகள்

ஆதி­யும் அந்­த­மும் இல்­லாத இந்து மதம் இறை வடி­வங்­களை அரு­ளின் சொரூ­ப­மாக காண்­பி­யம் செய்­கி­றது. அவர்­க­ளைப் பக்தி நெறி­யின் வழி வழி­பாடு இயற்­றும் தன்­மை­யதை மர­பாக தந்­துள்­ளது. இத்­தகு இறை வடி­வங்­க­ளின் திவ்­ய­மான வழி­பாடு இயற்­ற­லில் ஆண் கட­வு­ள­ரும், பெண் கட­வு­ள­ரும் முதன்­மைத்­து­வம் பெறு­கின்­ற­னர்.

அந்­த­வ­கை­யிலே பெண் தெய்வ வழி­பாட்­டில் மகா­லட்­சுமி சிறப்­பி­டம் பெறு­கி­றார். ‘அலை­ம­கள், திரு­ம­கள், ஸ்ரீதேவி, ஹரிப்­பி­ரியா, நாரா­யணி, பத்­மப்­பி­ரியா’ எனும் நாம­க­ர­ணம் கொண்டு அழைக்­கப்­ப­டு­கி­றாள்.

முத்­தே­வி­ய­ருள் ஒரு­வ­ராக, காத்­தல் தொழில் புரி­யும் விஸ்­ணு­வின் சக்­தி­யாக, செல்­வங்­கள் அனைத்­துக்­கு­மான அதி­ப­தி­யாக விளங்­கு­ப­வள் மகா­லட்­சு­மியே. பெண்­க­ளின் அழ­கி­யலை வர்­ணிக்­கும் விதத்­தில் புல­வர்­க­ளால் இலக்­கி­யங்­க­ளிலே உவமை கொள்­ளப்­ப­டு­கி­றாள்.

மகா­லட்­சு­மி­யின் அருள் கடாட்­சம் இன்றி மும்­மூர்த்­தி­கள் முதல் தேவர்­கள், முனி­வர்­கள், மானி­டர்­கள் என அனை­வ­ருமே பூர­ணத்­து­வம் பெற­மு­டி­யாது.

அவர்­கள் மேற்­கொள்­கின்ற முயற்­சி­க­ளும் இலக்­கினை அடை­யாது. மகா­லட்­சு­மி­யின் திரு­வ­ருள் கருணை இருந்­தால் மட்­டுமே நாம் மன­நி­றை­வு­ட­னும், இன்­பத்­து­ட­னும் வாழ முடி­யும்.

மகா­லட்­சுமி தேவி­யின் தோற்­றம்

ஒரு­முறை அமிர்­தம் வேண்டி தேவர்­க­ளும், அசு­ரர்­க­ளும் பாற்­க­ட­லைக் கடைந்­த­னர். அப்­போது பாற்­க­ட­லில் இருந்து தெய்­வீ­கம் பொருந்­திய பல வஸ்­துக்­கள் வெளி­வந்­தன. அத­னைத் தொடர்ந்து அழ­கெல்­லாம் ஒருங்கே அமை­யப்­பெற்ற மகா­லட்­சுமி பாற்­க­ட­லில் இருந்து தோற்­றம் கொண்­டார்.

தேவர்­க­ளின் தலை­வன் தேவியை வணங்கி இரத்­தி­ன­ம­ய­மான பீடத்­தில் எழுந்­த­ரு­ளச் செய்­தான். தேவர்­க­ளும் முனி­வர்­க­ளும் மகா­லட்­சு­மி­யைப் போற்­றித் துதித்­த­னர். தன் திருக்­க­ரத்­தில் செல்வ வளம் கொழிக்­கும் கல­சத்­து­டன் தோன்­றிய திரு­ம­கள் அக்­க­ணமே காத்­தல் கட­வு­ளான விஸ்­ணு­வைத் தன் துணை­வ­னாக தேர்ந்­தெ­டுத்­துக் கொண்­டாள்.

மண­மாலை சூடி நாரா­ய­ண­னின் இத­யக்­க­ம­லத்­தில் அமர்ந்து கொண்­டாள்.
இங்கு திரு­ம­க­ளாம் லட்­சு­மி­யின் பிறப்­பி­னைப் போற்­றிப் பாடும் மகா­கவி பார­தி­யார்,
“பாற்­க­ட­லி­டைப் பிறந்­தாள் அது பயந்த நல் அமு­தத்­தின் பான்மை கொண்­டாள்
ஏற்­கு­மோர் தாம­ரைப்பூ அதில் இணை மலர்த் திரு­வடி இசைந்­தி­ருப்­பாள்
நாற்க் கரம் தானு­டை­யாள் அந்த நான்­கி­னும் பல வகைத் திரு­வு­டை­யாள்
வேற் கரு விழி­யு­டை­யாள் செய்ய மேனி­யள் பசு­மையை விரும்­பு­ ப­வள்…!”
என்று அவள் திரு­வின் பொலிவை அற்­பு­த­மா­கப் பாடு­கி­றார்.

மகா­லட்­சுமி எழுந்­த­ரு­ளல்

மகா­லட்­சுமி தேவி எப்­போ­தும் பக­வான் மகா விஷ்­ணுவை விட்­டுப் பிரி­யாது ஸ்ரீ வைகுண்­டத்­தி­லும், திருப்­பாற்­க­ட­ லி­லும் வீற்­றி­ருக்­கின்­றாள். நாரா­ய­ணன் திரு­வ­டி­க­ளின் அடி­ய­மர்ந்து தன் பதி­யான நார­ணன் திரு­வ­டி­களை வருடி சேமம் நல்கு­ கிறாள்.

தூய்­மை­யும், பக்­தி­யும்,அன்­பும், நல் ஒழுக்­க­மும் எங்­கெல்­லாம் பரி­பூ­ர­ண­மாய் நிறைந்­தி­ருக்­கின்­ற­ னவோ, அங்­கெல்­லாம் ஸ்ரீதே­வி­யான திரு­ம­கள் விருப்­போடு வாசம் செய்­கின்­றாள்.

இல்­லங்­க­ளில் அமை­யப்­பெற்ற பூஜை அறை­யில் மகா­லட்­சு­மிக்­கு­ரிய தனித்­துவ இடத்தை வழங்கி அவரை வழி­பாடு இயற்­று­தல் மேன்மை. ‘தங்­கம், தீபம், கண்­ணாடி, மலர், தேங்­காய், மஞ்­சள், வெற்­றிலை, குங்­கு­மம், பழங்­கள்’ என அனைத்து மங்­க­ல­க­ர­மான பொருள்­க­ளி­லும் உறைந்­தி­ருப்­பாள்.

மேலும், பசு­வின் பின்­பு­றத்­தில் மகா­லட்­சுமி வாசம் செய்­ப­வள் என புரா­ணங்­கள் உரைக்­கின்­றன.

தூய்­மை­யில்­லாத இடம், இறை­வன் மீது பக்தி இல்­லா­தோர் இல்­லம், இருள் நிறைந்த இடங்­க­ளி­லும் தீய ஒழுக்­கம் கொண்­ட­வர்­கள், சோம்­பல் குணம் உடை­ய­வர்­கள், பிற­ருக்கு தானம் செய்­யா­த­வர்­கள் இடத்­தி­லும் மகா­லட்­சுமி கடாட்­சம் இருப்­ப­தில்லை.

இங்­கெல்­லாம் ஸ்ரீதே­வி­யின் தமக்­கை­யான மூதே­வியே வாசம் செய்­வாள் என்­பது ஜதீ­கம்.

விஷ்­ணு­வின் சக்­தி­யாய் துலங்­கும் திரு­ம­கள்

ஸ்ரீ மகா­லட்­சுமி, பக­வான் விஸ்­ணு­வின் திரு­மார்­பில் விருப்­பு­டன் உறைந்­தி­ருக்­கி­றாள். பக­வான் விஸ்ணு பூமி­யில் அவ­தா­ரம் எடுக்­கும் ஒவ்­வோர் சந்­தர்ப்­பங்­க­ளி­லும் மகா­லட்­சு­மி­யும் ஒவ்­வோர் அவ­தா­ரம் கொள்­கின்­றாள்.

விஸ்­ணு­ப­க­வான் இராம அவ­தா­ரம் புரிந்த போது, திரு­ம­கள் சீதை­யாக அவ­தா­ரம் செய்­தாள். பூமா­தே­வி­ யின் அவ­தா­ரம் என்­றும் சீதையை குறிப்­பி­டு­வர்.இதே போன்று பக­வான் விஸ்ணு கண்­ண­னாக அவ­தா­ரம் செய்த போது, லட்­சுமி ருக்­ம­ணி­யா­க­வும், விஸ்ணு மூர்த்தி வெங்­க­டே­ச­ராக அவ­தா­ரம் கொண்ட போது மகா­லட்­சுமி பத்­மா­வ­தி­யா­க­வும் அவ­தா­ரம் செய்­த­னர்.இத­னைப் புரா­ணங்­கள் ஆதார பூர்­வ­மாக எடுத்­தி­யம்­பு­கின்­றன.

இவ்­வாறு விஷ்­ணு­வின் சக்­தி­யாக விளங்­கு­வ­தால், ‘லட்­சுமி நாரா­ய­ணன், லட்­சுமி நர­சிம்­மர், திரு­ம­கள் தலை­வன்’ என்ற நாம­க­ர­ணங்­கள் கொண்டு மகா­லட்­சுமி அழைக்­கப்­ப­டு­கின்­றாள்.

வர­லட்­சுமி விர­தம்

மகா­லட்­சு­மி­யின் திரு­வ­ருள் கடாட்­சத்தை வேண்டி வர­லட்­சுமி விர­தம் வரு­டந்­தோ­றும் சிறப்­புற கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது. பெண்­கள் தமக்­கு­ரிய நல்­வாழ்­வின் பேற்­றினை பெறு­த­லின் பொருட்டு இவ்­வி­ர­தத்­தினை கடைப்­பி­டிப்­பர்.

இவ் விர­தத்தை பெண்­கள் கடைப்­பி­டிப்­ப­தன் ஊடே மாங்­கல்­யம் என்­றும் நிலைத்தி ­ருப்­ப­து­டன், நல் ஒழுக்­கம் உடைய கண­வ­னை­யும் அடை­ய­லாம். அது மாத்­தி­ர­மன்றி வாழ்­வில் சகல செல்­வங்­க­ளை­யும், நலன்­க­ளை­யும் பெறு­வ­தற்கு வர­லட்­சுமி விர­தம் துணை புரி ­கின்­றது.வெள்­ளிக் கிழ­மை­க­ளில் மகா­லட்­சு­மியை வழி­பாடு இயற்றி வரு­வது சிறப்­பைத் தரும்.

மகா­லட்­சு­மி­யின் புகழ்

‘மகா­லட்­சுமி அஷ்­ட­கம், மகா­லட்­சுமி அஷ்­டோத்­தி­ரம், மகா­லட்­சுமி சத­நா­ம­வளி, மகா­லட்­சுமி ஸ்தோத்­தி­ரம், அஷ்­ட­லட்­சுமி சுலோ­கம்’ போன்­றன லட்­சுமி தேவி­யின் சிறப்­பினை உரைக்­கும் திவ்ய மந்­தி­ரங்­க­ளை­யும், பாடல்­க­ளை­யும் கொண்­ட­மைந்­துள்­ளன.

மேலும், விஷ்­ணு­வின் பெருமை பற்­றிக் கூறும் புரா­ணங்­கள் மற்­றும் இதி­கா­சங்­க­ளி­லும் மகா­லட்­சு­மி­யின் பெரு­மை­கள் சிறப்­புற எடுத்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன. இவை தவிர மகா­லட்­சு­மி­யின் காயத்ரி மந்­தி­ரம்,

“ஓம் மகா­லட்­சு­மிச வித்­மஹே விஸ்ணு பத்­தி­னிச தீமஹி
தந்நோ லட்­சுமி ப்ரசோ­த­யாத்..”

என்­ற­வாறு அமைந்து அன்­னை­ யின் அருள் பேற்­றினை நாவன்­மை­யுள் சொட்­டு­கின் றது.

ஆக,இத்­தகு சிறப்­புக்­க­ளை­யும், பெரு­மை­க­ளை­யும் கொண்ட மகா­லட்­சுமி தேவியை நாமும் பக்தி சிரத்­தை­யோ­டும், அன்­போ­டும் வழி­பாடு இயற்­று­வோம். திரு­ மக­ளின் திரு­வ­ருள் கரு­ணை­யால் சகல செல்­வங்­க­ளை­யும், வெற்­றி­க­ளை­யும் கண்டு, இனி­மை­யான வாழ்­வைப் பெற்று இன்­புற்று இருப்­போ­மாக.

“நார­ணன் தவத்­தின் தேவி..
ஞாலத்­துப் பெண்­கள் போற்­றும் பூரணி..
பூவில் வாழும் புன்­னகை அரசி..

எல்­லாக் காரண காரி­யங்­கள் கணக்­கி­டல் யாரே..? – இந்­தத் தாரணி தன்­னில் வாழத் தன­ ய­னைக் கடைக்­கண்பா ராய்…!

You might also like