களங்கமில்லாத வாழ்க்கை வாழ விளம்பியே வரம் தருக!

விடை­பெ­றும் ஏவி­ளம்பி வரு­ட­மா­னது, சொல்­லத்­தக்­க­வாறு எந்­த­வொரு சாத­னை­யை­யும் எமக்­குத் தரா­மல், பிறக்­கின்ற விளம்பி வரு­டத்­திற்கு தனது சித்­தி­ரைப் புது­வ­ருட நல் வாழ்த்­துக்­க­ளைத் தெரி­வித்து, தான்­மு­டிக்க வேண்­டிய அரை­குறை வேலை­க­ளை­யும் ஒப்­ப­டைத்­துத் தன்­னி­ருப்­பி­டம் செல்­கி­றது.

பொது­வா­கவே நாம் இரண்­டா­வது பட்­ச­மா­கித் தாம­த மா­கி­விட்­டோம். இனி­மே­லும் அவ்­வாறு பின்­தள்­ளப் பட்டு, புறம்­தள்­ளப்­ப­டு­வ­தைப் புது­வ­ரு­ட­மா­னது அனு­ம­திக்­காது தமி­ழர்­கள் தலை­நி­மிர்ந்து வாழ ஆனவை அனைத்­தை­யும் செய்­தே­யாக வேண்­டும். அதற்­காக விளம்­பியே உன்னை வர­வேற்­கின்­றோம்.

முற்­றத்­தில் கோலமிட்டு, விளக்­கேற்றி, பொங்­க­லிட்டு, சூரிய வணக்­கம் செய்து கோமா­தாக்­க­ளின் வரு­கை­யிலே உன்­னைப் புகழ்ந்­தேத்தி, 365 நாளும் அற்­பு­தம் செய்து நீயோ அதி­ச­ய­மாக வேண்­டும் என நாம் பணிந்து உன்­னைப் போற்­று­கின்­றோம். ஆகவே நீ வெல்­வது நிச்­ச­யம்.

விடை­காண வேண்­டும் நீ

அற்ப சொற்ப முன்­னேற்­றம் தென்­பட்­டா­லும் உருப்­ப­டி­யான தீர்வு இது­வரை பேசப்­ப­ட­வில்லை. எழு­தப்­ப­ட­வே­யில்லை. மூவின மக்­க­ளும் நல்­லி­ணக்­க­மாக வாழ­வேண்­டு­மா­யின், இலங்கை ஒரு மதச் சார்­பற்ற நாடாக மிளிர வழி­ச­மைக்­கப்­பட வேண்­டும்.

ஒரு­ சா­ரார் மட்­டும் இந்த நாட்­டின் அரச தலை­வ­ரா­க­வும், தலைமை அமைச்­ச­ரா­க­வும் ஆட்­சிப் பொறுப்­பில் வரும்­போது, மூவின மக்­க­ளும் நல்­லி­ணக்க அடிப்­ப­டை­யில் அப்­ப­த­வி­க­ளுக்­குப் பொறுப்­பா­கும்­படி சட்­ட­யாப்பு திருத்­தப்­ப­டு­வது மிக­மிக முக்­கி­ய­மா­னதே.

விளம்­பியே! போரைக் கார­ணங்­காட்டி பறிக்­கப்­பட்ட நிலங்­கள், அழிக்­கப்­பட்ட வீடு­கள், நாச­மாக்­கப்­பட்ட தமி­ழர்­தம் வாழ்வு, காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் அவ­ல­நிலை, பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ ளின் பரி­தா­ப­நிலை, பெற்­றோரை இழந்த பிள்­ளை­க­ளின் ஏதிலி நிலை, பிள்­ளை­களை அகா­லப்­ப­டுத்­திய பயங்­க­ர­வா­தச் சட்ட ஆதிக்­க­நி­லை­யில் மௌனிக்­கப்­பட்ட அடி­மை­நிலை, ஆயி­ரம் விகா­ரை­களை அவ­சர அவ­ச­ர­மாக வட­ப­கு­தி­யில் அமைக்­கும் அபா­ய­நிலை, மகா­வலி அபி­வி­ருத்தி என்ற போர்­வை­யில் மண­லாறு வெலி­ஓயா என பேரி­னக் குடி­யேற்­ற­மாய் மாறி­விட்ட முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் சோக­நிலை, நாளி­லும் பொழு­தி­லும் பௌத்த நாடாக மாறி­வி­டு­கின்ற பின்­ன­ணி­யில் இந்து, முஸ்­லிம் மக்­க­ளது கையா­லா­காத அபாக்­கிய நிலை, கண்­முன்­னா­லேயே துடிக்­கத் துடிக்க பலாத்­கா­ரம் செய்­யப்­ப­டு­கின்ற பெண்­க­ளுக்­கான வன்­மு­றைக் கொடூர நிலை, அப்­பா­வையே தெரிய முடி­யாத பிறந்த சிசுக்­க­ளைக் கொலை செய்­கின்ற அமா­னுஸ் அக்­கி­ரம நிலை, பொதுச் சொத்­துக்­க­ளில் சவா­ரி­வி­டு­கின்ற அதர்­ம­நிலை, கோவில் கட்­டு­வ­து­தான் சாமிக்கு விருப்­ப­ மென்று இருப்­ப­தையே இடித்து இடித்து உள்ள தெய்­வீ­கத் தன்­மை­யைக் குலைத்­து­வி­டும் அதி­கா­ர­நிலை, கன்­றுத்­தாச்சி மாடு­க­ளையே இறைச்­சிக்­காக வெட்­டிச் சரிக்­கின்ற துரோ­கத்­த­ன­மான துர்­பாக்­கிய நிலை, ஆறு இலட்­சம் வாக்­கு­கள் தேங்­கிக் கிடக்­கின்ற நீதிக்­கா­கப் போரா­டும் அர­சின் நிலை, ஐந்­தாம் ஆண்டு புல­மைப்­ப­ரீட்­சைக்­கா­கச் சின்­னஞ்­சிறு பால­கர்­களை வதைக்­கும் கொடு­மைக்கு விடை­யில்­லாத வினாக்­க­ளின் தொந்­த­ர­வான அநி­யா­ய­நிலை, எல்­லா­வற்­றிற்­கும் மேலாக வீதி­க­ளில் விதி­க­ளைச் சுமக்­கும் யம சங்­கா­ர­நிலை, வியர்வை சிந்தி எல்­லோ­ரின் பசி­யைப் போக்­கு­கின்ற விவ­சா­யி­க­ளின் கண்­ணீ­ருக்­குத் தொடர்ந்­தும் தீர்வு காணப்­ப­டாத நிலை’ – என ஒட்­டு­மொத்­த­மான பெரிய சுமையை நீ சுமக்­கப்­போ­கி ன்­றாய்.

விளம்பி என்ற சொல்­லுக்­கும் மேற்­போந்த பொறுப்­புக்­க­ளுக்­கும் விடை­கா­ணவே நீ வர­வேண்­டும். மேலும் மக்­கள் அனை­வ­ரும் சரி­நி­கர் சமா­ன­மாக வாழ­வும், அதி­கா­ரங்­க­ளோடு மாகா­ணங்­கள் சுயாட்சி பெற­வும், ஆயி­ரம் தொழிற்­சா­லை­களை நோக்­கிய தூர­நோக்­கில் நிதி­யி­ட­வும் விளம்பி எனும் சித்­தி­ரைப் புத்­தாண்டே நீ வர­ம­ரு­ளப் பிறந்து வாராய்.

You might also like