சிரியா மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்!!

அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இணைந்து இன்று அதிகாலை சிரியாவின் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன என்று பன்னாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அஸாதின் அரசு இரசாயன ஆயுதப் பயன்பாட்டை நிறுத்தும் வரை இந்த ஏவுகணைத் தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏழு வருட காலமாக இழுபறி நிலையில் உள்ள சிரியாப் போரில் அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகள் சம்பந்தப்பட்டிருந்தாலும், நேற்றும், இன்றும் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல், மேற்கு நாடுகள் சிரியாவில் மேற்கொண்டுள்ள மிகப் பெரிய தலையீடு என்று பன்னாட்டு உறவு தொடர்பான அவதானிகள் விமர்சித்துள்ளனர்.

சிரியாவின் மீது மேற்கு நாடுகள் மேற்கொள்ளும் இந்தத் தாக்குதல் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலாகவும் வர்ணிக்கப்படுகின்றது. அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகள் சிரியாவிலுள்ள அரச எதிர்ப்பு குழுக்களுக்கு உதவி வருகின்றன.

இதேவேளை, பசீர் அல் அஸாதிற்கும், அவரது அரசுக்கும் இராணுவத்துக்கும் ரஷ்யா உதவி வழங்கி வருகின்றது. ரஷ்யாவானது சிரியாவின் உள்நாட்டுப் போரில் கடந்த 2015 ஆம் ஆண்டு தலையிட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like