கணவன் வழியில் சமந்தா!!

திருமணத்துக்குப் பின்னர் தமிழ், தெலுங்கு எனப் படங்களில் நடித்து வரும் சமந்தா, தனத கணவர் நாக சைதன்யா சொல்வதைப் பின்பற்றுவதால் தான் கவலையில்லாமல் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாகவே இருந்து வருகிறார் சமந்தா. பட வாய்ப்புகள் அவரைத் தேடி வருகின்றன.

சமந்தா, ராம்சரண் தேஜாவுடன் நடித்து சமீபத்தில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ படத்துக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்புக் கிடைத்துள்ளது. இதனால் சமந்தா மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

கணவர் நாகசைதன்யாவின் அறிவுரையைக் கேட்டு மிகவும் மன நிறைவுடன் இருப்பதாக சமந்தா கூறியுள்ளார். இது பற்றி அவர் அளித்த செவ்வியில்,
“ஒவ்வொரு படத்திலும் 100 சதவீதம் ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும். ரசிகர்கள் தீர்ப்பு நம் கையில் இல்லை என்று எனது கணவர் நாகசைதன்யா கூறியதைப் பின்பற்றுகிறேன். நடிக்கும் படம் பற்றியும், அந்தக் கதை பற்றியும் அவரிடம் பேச மாட்டேன். சினிமாவையும், குடும்பத்தையும் நாங்கள் இணைக்க மாட்டோம். தோல்விகளை கையாளுவது எப்படி என்பதை கணவரிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ரங்கஸ்தலம்’ என் உழைப்புக்கு ரசிகர்கள் தந்த நற்சான்றிதழ்” என்றார்.

You might also like