பாதாம் அல்வா

தேவையான பொருட்கள்:-

​பாதாம் – கால் கிலோ

பால் – அரை டம்ளர்

குங்குமப்பூ – ஒரு பின்ச்

பட்டர் – 200 கிராம்

சீனி – கால் கிலோ

கேசரி கலர் – ஒரு சிட்டிகை

செய்முறை:

பாதாமை கொதிக்கும் வெந்நீரில் போட்டு தோலை உரித்து கட் செய்து மிக்ஸியில் பால், குங்குமப்பூ சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

ஒரு நாண் ஸ்டிக் பானில் பட்டரை போட்டு லேசாக உருக்க வேண்டும் முக்கால் வாசி உருகும் போது அரைத்த பாதாமை போட்டு கைவிடாமல் நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.

பிறகு கேசரி கலர் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஒருகரண்டியில் கலக்கி ஊற்றவும்.

கிளறி கலர் மாறி வரும் போது சர்க்கரை சேர்த்து நன்கு அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

சுவையான பாதாம் அல்வா ரெடி

 

 

You might also like