விபத்தில் ஆறு பேர் காயம்

தொண்டைமானாறு, அரசடிப் பகுதியில் இன்று நடந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் மந்திகை ஆதார மருத்துவமனையில் சேர்க்கபட்டனர்.

வீதியில் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஆலய மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது.

வழிபாட்டில் ஈடுபட்ட ஐந்து பேரும், காரில் பயணித்த ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You might also like