உயிரெடுத்தது சிகரெட்!!

பெற்றோல் போத்தலுடன் சிகரெட் புகைத்தவாறு பயணித் தவர் போத்தல் மூடி கழன்றதும் தீ பற்றிச் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் கிளிநொச்சி பாரதிபுரத்தில் இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் றெனோல்ட் றீகன் (வயது – 34) என்ற குடும்பத் தலைவரே உயிரிழந்தார்.

அவர் வேலைதேடி மோட்டார் சைக்கிளில் கடந்த 16 ஆம் திகதி பயணித்துள்ளார். மூடி இல்லாத போத்தலில் பெற்றோல் கொள்வனவு செய்து சிகரெட் புகைத்தவாறு பயணித்தார். போத்தல் நழுவி விழ பெற்றோல் ஊற்றுண்டுள்ளது.

அதனை எடுக்கக் குனிந்தபோது வாயிலிருந்த சிகரெட் நெருப்புப்பட்டு தீ பற்றியது. அவரைது நெஞ்சு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளைிலும் தீ பற்றியது. கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். சிகிச்சை பயனளிக்காது நேற்றுமுன்தினம் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை நடத்தினார்.

You might also like