சிந்திக்கத்தக்கவை ராஜிதவின் கருத்துக்கள்!!

கடந்த 11ஆம் திக­தி­யன்று இடம்­பெற்ற ஊடக விய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே அவர் இந்­தக் கருத்­துக்­க­ளைத் துணி­வு­டன் தெரி­வித்­தி­ருக்­கி­றார். வடக்­குப் போன்று தெற்­கி­லும் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­க­ளைப் படை­யி­னர் அடாத்­தா­கப் பிடித்து வைத்­தி­ருந்­தால் என்ன நடந்­தி­ருக்­கு­மெ­னக் கேள்வி எழுப்­பிய அவர், வலி­கா­மம் வடக்­கில் மக்­க­ளின் காணி­களை அடாத்­தா­கப் பிடித்து வைத்­தி­ருக்­கும் படை­யி­னர் அங்கு வெதுப்­ப­கத்தை நடத்­து­வது எந்த வகை­யில் நியா­ய­மா­னது என்­றும் கேள்வி எழுப்­பி­னார். கொழும்­பில் இடம்­பெற்ற அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பின்­போது அவர் இந்­தக் கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ளமை முக்­கி­யத்­து ­வம் பெறு­கின்­றது.

படை­யி­னர் வச­மி­ருந்த 650 ஏக்­கர் காணி  மக்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­ப­டு­வது நல்­ல­தோர் சமிக்ஞை

வடக்­கில் படை­யி­னர் வச­மி­ருந்த 650 ஏக்­கர் காணி­கள் அவற்­றின் உரி­மை­யா­ளர்­க­ளி­டம் திரும்ப ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வது தொடர்­பாக கேள்வி எழுப்­பிய ஊட­க­வி­ய­லா­ளர்­கள், தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தின் மீதான வாக்­கெ­டுப்­பின்­போது கூட்­ட­மைப்பு தீர்­மா­னத்­துக்கு எதி­ராக வாக்­க­ளித்­த­மைக்­குப் பிர­தி­யு­ப­கா­ர­மாக இந்­தக்­கா­ணி­கள் மீள ஒப்­ப­டைக்­கப்­ப­டு­கின்­றனவா? என­வும் கேள்வி எழுப்­பி­யி­ருந்­த­னர்.

அதனை முற்­றாக மறுத்த அமைச்­ச­ரும், அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ரவு தெரி ­விப்­ப­தற்கு கூட்­ட­மைப்பு எந்­த­வொரு நிபந்­த­னை­யை­யும் விதிக்­க­வில்­லை­யெ­னக் கூறி­னார்.

மக்­க­ளின் காணி­க­ளைப் படை­யி­னர் அடாத்­தா­கப் பிடித்து வைத்­தி­ருப்­பதை எந்த வகை­யி­லும் நியா­யப்­ப­டுத்­தி­விட முடி­யாது. போர் இடம்­பெற்­ற­போது பாது­காப்­புக் கார­ணங்­க­ளுக்­காக பாது­காப்பு வல­யம் என்ற போர்­வை­யில் பொது மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­கள் படை­யி­ன­ரால் ஆக்­கி­ர­மிக்கப்பட்டிருந்தன. போர் ஓய்ந்து பல ஆண்­டு­கள் கழிந்­து­விட்ட நிலை­யி­லும் படை­யி­ன­ரால் அந்­தக் காணி­கள் விடு­விக்­கப்­படாமையை எவ­ரா­லும் நியா­யப்­ப­டுத்­தி­விட முடி­யாது.

தென்­ப­கு­தி­யைச் சேர்ந்த இன­வா­தி­க­ளுக்கு இந்­தக் காணி­களை விடு­விப்­ப­தில் உடன்­பா­டில்­லாத கார­ணத்­தால், தேவை­யில்­லாத விமர்­ச­னங்­க­ளைத் தெரி­வித்து வரு­கின்­ற­னர். வட­ப­கு­தி­யில் 650 ஏக்­கர் காணி­க­ளைப் படை­யி­னர் விடு­வித்­த­ மை­யை­யும் இன­வாத நோக்­கில் அவர்­கள் பார்க்­கின்­ற­னர். மக்­க­ளி­ட­மி­ருந்து அடாத்­தா­கப் பிடித்து வைக்­கப்­பட்ட பொது­மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­களை விடு­விப்­ப­தில்­கூட இன­வா­தச் சிந்­த­னையை வெளிக்­காட்­டு­கின்ற இவர்­க­ளுக்கு அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன நல்ல சாட்­டை­யடி கொடுத்­தி­ருக்­கி­றார் என்­று­தான் கூற வேண்­டும்.

எதிர்க்­கட்­சித் தலை­வர் மீது வைராக்­கி­யம் பாராட்­டும்
கூட்டு எதி­ர­ணித் தரப்பு

எதிர்க்­கட்­சித் தலை­வர் சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரப்­ப­டு­மா­னால், அது நிச்­ச­ய­மாக முறி­ய­டிக்­கப்­ப­டு­மென ராஜித தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத் தக்­கது. ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தால் ஆத்­தி­ர­மும், அவ­மா­ன­மும் அடைந்த மகிந்த அணி­யி­னர், சம்­பந்­தனை எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் இருந்து அகற்­றி­விட்­டால் தாம்­பட்ட அவ­மா­னம் துடைத்­தெ­றி­யப்­பட்­டு­வி­டு­மென நம்­பு­கின்­ற­னர்.

இத­னால் எப்­பா­டு­பட்­டே­னும் சம்­பந்­த­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை நிறை­வேற்றி வைப்­ப­தற்­குத் துடி­யாய்த் துடிக்­கின்­ற­ னர். ஆனால் இதை முறி­ய­டிக்க வேண்­டு­மென்­ப­தில் ரணில் தரப்­பி­னர் குறி­யாக இருப்­பது தெளி­வா­கத் தெரி­கின்­றது.

முன்­னாள் அரச தலை­வர்­க­ளான ஜே.ஆர் ஜெய­வர்த்­தன, ஆர். பிரே­ம­தாஸ, சந்­தி­ரிகா குமா­ர­துங்க, மகிந்த ராஜ­பக்ச ஆகி­யோர் போரை நடத்­தி­ய­தில் பிர­தான பங்கை வகித்­த­னர். இவர்­கள் தமி­ழர்­களை மனி­தர்­க­ளா­கக்கூட மதிக்­க­வி்ல்லை. மிரு­கங்­களை நடத்­து­வது போன்று அவர்­களை நடத்­தி­யுள்­ள­னர்.

தமிழ் மக்­க­ளின் அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­க­ளைக் கண்­ட­றிந்து அவற்­றுக்­குத் தீர்வு காண்­ப­தற்கு இவர்­க­ளில் எவ­ருமே ஒரு­போ­தும் முயற்சி செய்­த­தில்லை. மாறாக தமி­ழர்­களை ஒட்­டு­மொத்­த­மாக அழித்து விட்­டால், எல்­லாமே சரி­யா­கி­வி­டு­மென எண்­ணிச் செயற்­பட்­ட­னர். இதன் விளை­வு­க­ளைத்தான் நாடு இன்று அனு­ப­வித்து வரு­கின்­றது. ஆனா­லும் இந்த இன­வா­தி­கள் இன்­ன­மும் திருந்­தி­ய­ தா­கத் தெரி­ய­வில்லை.

பெளத்த மேலா­திக்­கச்  சிந்­தனை உள்­ள­வரை
இன ஒற்றுமைக்கு வாய்ப்­பில்லை

பெளத்த மேலாண்மை இலங்­கை­யில் இருக்­கும் வரை­யில், இலங்­கை­யில் வாழ்­கின்ற இனங்­க­ளுக்கிடை­யில் ஒற்­றுமை நில­வு­மென எதிர்­பார்க்க முடி­யாது. பெளத்த தேரர்­க­ளும், மகா நாயக்­கர்­க­ளும் அர­சி­ய­லில் நேர­டி­யா­கத் தலை­யிட்டு செல்­வாக்­குச் செலுத்தி வரு­கின்­ற­னர். உலகத் தொழி­லா­ளர் தின­மான மே மாதம் முத­லாம் திகதி தொடர்­பான நிகா்­வு­கள்­கூட பெளத்த சங்கத்தி­ன­ரின் நெருக்­கு­தல் கார­ண­மாக மே மாதம் ஏழாம் திக­திக்கு மாற்­றம் செய்­யப்­பட்­டமை உல­கில் நிக­ழாத அதி­ச­யங்­க­ளில் ஒன்­றா­கும். ஆனால் அந்த அதி­ச­யம் இங்கு நிகழ்ந்­துள்­ளது.

ராஜித போன்று துணிச்­ச­லான அர­சி­யல்வாதி­கள் தெற்­கில் உரு­வா­கா­த­வரை நாட்­டில் அமை­தி­யை­யும், இன நல்­லி­ணக்­கத்­தை­யும் எதிர்­பார்க்க முடி­யாது. நாட்­டின் தலை­வி­தி­யி­லும் மாற்­றம் ஏற்­ப­டாது. ஒரு கட்­டத்­துக்கு அப்­பா­லும் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­வதை சர்­வ­தே­சம் ஏற்­றுக்­கொள்­ளு­மெ­னக் கூற­மு­டி­யாது.

இம்­முறை இடம் பெற்ற ஐ.நா. மனித உரி­மை­கள் சபைக் கூட்­டத்­தில் இலங்­கை­யின் உண்­மை­யான முகம் வெளிப்­பட்டு விட்­டது. தொடர்ந்­தும் பொய் முகத்­தைக் காட்­டிக் கொண்­டி­ருப்­ப­தற்கு அத­னால் முடி­யாது என்­பதை ஒப்­புக்­கொள்­ளத்­தான் வேண்­டும்.

You might also like