ஸ்ரான்லி அணி போராடி வெற்றி

கொக்­கு­வில் சன­ச­மூக நிலை­யம் நடத்­தும் யாழ்ப்­பாண மாவட்ட கிரிக்­கெட் சங்­கத்­தில் பதிவு செய்­யப்­பட்ட கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான தொட­ரில் ஸ்ரான்லி அணி வெற்­றி­பெற்­றது.

கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்­தில் ஸ்ரான்லி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் சென்றல் அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பா­ணம் சென்றல் அணி 28.1 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 167 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக ராஜீவ்­கு­மார் 80 ஓட்­டங்­க­ளை­யும், சலிஸ்­ரன் 25 ஓட்­டங்­க­ளை­யும், மது­சன் 19 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் ஸ்ரான்லி அணி சார்­பில் விது­சன் 4 இலக்­கு­க­ளை­யும், விஸ்­ணு­க­ரன் 3 இலக்­கு­க­ளை­யும், விதுர்­சன் 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய ஸ்ரான்லி அணி 28.3 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் 9 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்­றது. அதி­க­பட்­ச­மாக சுஜி­க­ரன் 67 ஓட்­டங்­க­ளை­யும், பிர­சாத் 45 ஓட்­டங்­க­ளையும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் யாழ் சென் றல் அணி சார்­பில் லது­சன் 3 இலக்­கு­க­ளை­யும், கிரி­சாந் மற்­றும் தீபன் ஆகி­யோர் தலா இரு இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

You might also like