மயிலிட்டியில் களவாக வெட்டப்படும் மரங்கள்!!

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள மக்களின் வீடுகளில் உள்ள மரங்கள், பெறுமதியான மரங்கள் என்பன வியாபாரிகளால் வெட்டப்படுகின்றன என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ”மயிலிட்டி தெற்கு (தென்மயிலை) கட்டுவனைச் சேர்ந்த மக்கள் அனுமதியின்றி மரங்கள் கட்டட தளபாடங்களை அனுமதியின்றி வெட்டவோ, சேதமாக்கவோ வேண்டாம். இது ஊர்மக்களின் அன்பார்ந்த கோரிக்கையாகும். இதையும் மீறி செயல்படும் நபர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

You might also like