சிட்னியில் அவசர எச்சரிக்கை!!

ஆஸ்ரேலியாவின் சிட்னியில் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அவசர எச்சரிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று முதல் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவருகின்றது.

இதுவரையில் ஆயிரம் ஹெக்ரேயர் நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக, தீயணைப்புப் படைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கட்டுக்கடங்காமல் மிக வேகமாகப் பரவிவரும் காட்டுத்தீயை அணைக்கும் நடவடிக்கையில், தீயணைப்புப் படைவீரர்கள் சுமார் 500 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், இந்தக் காட்டுத்தீயின் போது எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை.

கடுமையான வெப்பநிலையே காட்டுத்தீ பரவுவதற்குக் காரணமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like