இறுதிப் பந்தில்  வென்ற டெல்லி

மும்பைக்கு மூன்றாவது தோல்வி

ஐ.பி.எல். தொட­ரில் நேற்று மாலை நடை­பெற்ற ஆட்­டத்­தில், இறு­திப் பந்­தில் வைத்து மும்பையை வீழ்த்தி தொட­ரில் தனது முத­லா­வது வெற்­றி­யைப் பதி­வு­செய்­தது டெல்லி. அதே­வேளை தொடர்ச்­சி­யாக தனது மூன்­றா­வது தோல்­வி­யைச் சந்­தித்­தது மும்பை.

மும்­பை­யின் இன்­னிங்ஸ்

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற டெல்லி அணி, முத­லில் களத்­த­டுப்­பைத் தீர்­மா­னித்­தது. மும்பை அணி­யின் ஆரம்ப வீரர்­க­ளாக சூரி­யக்­கு­மார் யாதவ் மற்­றும் லூயிஸ். கடந்த இரண்டு ஆட்­டங்­க­ளில் சிறந்த பெறு­பேற்றை வெளிப்­ப­டுத்­தா­ததை அடுத்து, மும்பை அணி­யின் வழக்­க­மான ஆரம்­பத் துடுப்­பாட்ட வீர­ரான அணித் தலை­வர் ரோகித் துடுப்­பாட்ட வரி­சையை மாற்றி தன்னை மத்­திய வீர­ரா­கக் கொண்டு சென்­றி­ருந்­தார்.

திட்­டம் பெரும் வெற்­றி­ய­ளித்­தது. அதி­ர­டி­யாக விளை­யா­டி­னார்­கள் ஆரம்ப வீரர்­கள் இரு­வ­ரும். 3.4 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் 50 ஓட்­டங்­க­ளை­யும், 8.3 பந்­தப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் 100 ஓட்­டங்­க­ளை­யும் இலக்­குச் சரி­வில்­லா­மல் பெற்­றது மும்பை இந்­தி­யன்ஸ். அணி 102 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் 48 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார் லூயிஸ்.

அரைச்­ச­தம் கடந்து 52 ஓட்­டங்­க­ளு­டன் வீழ்ந்­தார் சூரி­யக்­கு­மார் யாதவ். மூன்­றாம் நிலை வீர­ரான இசான் கிசா­னும் அதி­ரடி ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­னார். அவர் 23 பந்­து­க­ளில் 44 ஓட்­டங்­க­ளைக் குவித்­தார். ரோகித் உள்­ளிட்ட ஏனைய வீரர்­கள் இறு­திப் பந்­துப்­ப­ரி­மாற்­றங்­களை சரி­வ­ரப் பயன்­ப­டுத்­த­வில்லை.

முடி­வில் 7 இலக்­கு­களை இழந்து 194 ஓட்­டங்­க­ளைக் குவித்­தது மும்பை.
பந்­து­வீச்­சில் போல்ட், கிறிஸ்­ரி­யன், டிவெட்­டியா மூவ­ரும் தலா இரு இலக்­கு­க­ளை­யும், சமி ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

டெல்­லி­யின் இன்­னிங்ஸ்

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய டெல்லி அணிக்­கும் சிறந்த ஆரம்­பத்தை வழங்­கி­யது அந்த அணி­யின் ஆரம்ப இணை. றோய் அடித்­தாட கம்­பீர் நிதா­ன­மான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­னார். இலக்­குச் சரி­வில்­லா­மல் 50 ஓட்­டங்­களை எட்­டி­யது டெல்லி. 50 ஓட்­டங்­க­ளி­லேயே தனது முத­லா­வது இலக்­கை­யும் இழந்­தது.

15 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார் கம்­பீர். இதற்­காக அவர் 16 பந்­து­களை எதிர்­கொண்­டார். வந்­தார் பன்ட். றோய், பன்ட் இரு­வ­ரும் இணைந்து அபார ஆட்­டத்தை வழங்­கி­னர். 9.5 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் 100 ஓட்­டங்­களை எட்­டி­யது டெல்லி.

அணி 119 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் ஆட்­ட­மி­ழந்­தார் பன்ட். மறு­மு­னை­யில் றோயின் அதி­ரடி தொடர்ந்­தது. மகஸ்­வெல் 13 ஓட்­டங்­க­ளு­டன் ஏமாற்­றி­னா­லும் ஸ்ரேயாஸ் சிறந்த இணைப்­பாட்­டத்தை வழங்­கி­னார். இறு­திப் பந்­துப்­ப­ரி­மாற்­றத்­தில் 11 ஓட்­டங்­கள் டெல்­லி­யின் வெற்­றிக்­குத் தேவைப்­பட்­டது.

ரகு­மான் பந்­து­வீச அழைக்­கப்­பட்­டார். முதல் பந்­தில் பவுண்­ட­ரி­யும், அடுத்த பந்­தில் சிக்­ச­ரும் விளாசி ஓட்­டத்­தைச் சம­நி­லைப்­ப­டுத்­தி­னார் றோய். அடுத்த மூன்று பந்­து­கள் ஓட்­ட­மற்ற பந்­து­க­ளாக வீசப்­பட்­டன. இறு­திப் பந்­தில் ஓர் ஓட்­டத்தை எடுத்­தால் டெல்­லிக்கு வெற்றி. வெற்­றி­யு­டன் முடித்­தார் றோய்.

You might also like