வவு­னியா நகரை ஆளப்­போ­வது யார்?

வவு­னியா நகர சபை­யின் தவி­சா­ளர் தெரிவு இன்று இடம்­பெ­ற­வுள்­ளது. இந்­தச் சபை­யைக் கைப்­பற்­று­வ­தில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி இடையே கடும் போட்டி நில­வு­கின்­றது. இரண்டு கட்­சி­க­ளும் ஏனைய கட்­சி­களை வளைத்­துப்­போட்டு ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தில் மும்­மு­ர­மாக உள்­ளன.

தொங்கு நிலை­க­ளில் உள்ள சபை­க­ளின் தவி­சா­ளர், உப தவி­சா­ளர் தெரி­வு­கள் வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் தலை­மை­யில் இடம்­பெற்று வரு­கின்­றது.

வவு­னியா நகர சபை­யின் தவி­சா­ளர் தெரிவு இன்று காலை 10 மணிக்கு வவு­னியா நகர சபை­யின் மண்­ட­பத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. வவு­னியா நகர சபை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு 8 ஆச­னங்­க­ளை­யும், ஐக்­கிய தேசி­யக் கட்சி 4 ஆச­னங்­க­ளை­யும், தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி என்­பன தலா 3 ஆச­னங்­க­ளை­யும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, ஈ.பி.டி.பி., சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி என்­பன தலா ஒவ்­வொரு ஆச­னங்­க­ளை­யும் கொண்­டுள்­ளன.

ஐக்­கிய தேசி­யக் கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, ஈ.பி.டி.பி, சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி என்­ப­வற்­றின் ஆத­ர­வைத் திரட்­டி­யுள்­ளன. கூட்­ட­மைப்­பி­டம் 8 ஆச­னங்­கள் மாத்­தி­ரமே உள்­ளன. தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி ஆத­ர­வ­ளித்­தா­லும் ஒன்­பது ஆச­னங்­களை மாத்­தி­ரமே கூட்­ட­மைப்­பால் பெற்­றுக் கொள்ள முடி­யும்.

இந்த நிலை­யில் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் ஆத­ர­வைப் பெற்­றுக் கொள்­வ­தற்­கான பேச்­சுக்­கள், வவு­னியா மாவட்ட தமிழ் அர­சுக் கட்சி தலை­மை­யால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் சார்­பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்­பி­னரே வவு­னி­யா­வில் வெற்றி பெற்­றி­ருந்­த­னர். அவர்­க­ளது ஆத­ர­வைப் பெற்­றுக் கொள்­வ­தற்­கான பேச்­சுக்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

வவு­னியா நகர சபை­யில் உப­த­வி­சா­ளர் பதவி, வவு­னியா தெற்­கில் தவி­சா­ளர் பதவி தமது கட்­சிக்கு வழங்­கப்­பட்­டால், கூட்­ட­மைப்­புக்கு ஆத­ரவு வழங்­க­லாம் என்று இந்­தப் பேச்­சுக்­க­ளில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்­கள், வவு­னியா மாவட்­டத்­தின் தமிழ் அரசு தலை­மை­யி­டம் எடுத்­து­ரைத்­த­னர். இதற்கு மாவட்ட தமிழ் அர­சு­வின் தலை­மை­யும் இணங்­கிய நிலை­யில், நேற்­றைய தினம் திடீ­ரென கூட்­ட­ணி­யி­னர் அதி­லி­ருந்து பின்­வாங்­கி­யுள்­ள­னர்.

தாம் நடு­நி­லமை வகிக்­கப் போவ­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர். இருப்­பி­னும் உறுப்­பி­னர்­களை அலை­பே­சி­க­ளு­டன் இருக்­கு­மா­றும் முடி­வில் மாற்­றம் என்­றால் அறி­விப்­போம் என்­றும் கூட்­ட­ணி­யின் நகர சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நில­மையை உணர்ந்து தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, கூட்­ட­மைப்பை ஆத­ரிக்­கா­விட்­டால் வவு­னியா நகர சபை பெரும்­பான்­மைக் கட்­சி­யான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­டம் தாரை வார்க்­கப்­பட்டு விடும் என்று வவு­னியா பொது அமைப்­பி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

இதே­வேளை, வவு­னியா வெண்கலச் செட்­டிக்­கு­ளம் பிர­தேச சபை­யின் அமர்வு இன்று மாலை 2.30 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது. இந்­தச் சபை­யி­லும், தமிழ்க் கட்­சி­கள் ஓர­ணி­யில் திர­ளா­விட்­டால், சபை பெரும்­பான்­மைக் கட்­சி­க­ளி­டம் செல்­லும் நில­மையே காணப்­ப­டு­கின்­றது. இந்­தச் சபை­யில், கூட்­ட­மைப்பு 5 ஆச­னங்­க­ளை­யும், ஐக்­கிய தேசி­யக் கட்சி மற்­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி என்­பன தலா 4 ஆச­னங்­க­ளை­யும், கூட்­ட­ணி­யி­னர் 3 ஆச­னங்­க­ளை­யும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் என்­பன தலா ஓர் ஆச­னங்­க­ளை­யும் கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like