மக்களின் உரிமையை வழங்குவது பரிசு அல்ல!!

யாழ்ப்பாணம் மாவட்­டத்­தின் வலி­கா­மம் வடக்­குப் பகு­தி­யில் பலாலி இரா­ணு­வப் பெரும் தளத்தை அண்­டி­யுள்ள 683 ஏக்­கர் காணி­களை பொது­மக்­க­ளின் பயன்­பாட்­டுக்­குத் திருப்பி ஒப்­ப­டைத்­தி­ருக்­கி­றது இரா­ணு­வம்.

கடந்த ஒரு வருட காலத்­தில் விடப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய அதி­க­ள­வி­லான நிலப் பகுதி இது. தனது பிடி­யில், ஆக்­கி­ர­மிப்­பில் வைத்­தி­ருந்த காணி­களை இரா­ணு­வம் பொது­மக்­க­ளி­டம் திருப்பி ஒப்­ப­டைத்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது, பாராட்­டுக்­கு­ரி­யது.

ஒரு­போ­தும் திரும்பி வராது என்று எண்­ணி­யி­ருந்த நிலப்­ப­குதி பொது­மக்­க­ளுக்கு மீளக் கிடைத்­தி­ருப்­பது மகிழ்ச்­சிக்­கு­ரி­யது. இத­னைச் சாத்­தி­ய­மாக்­கி­ய­தில் 2015ஆம் ஆண்டு தமிழ் மக் களும் அதன் பின்­ன­ரும் அவர்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளா­கிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் எடுத்த முடி­வு­கள், நகர்­வு­கள் பெரும் பங்­க­ளிப்­பைச் செய்­துள்­ளன என்­பதை மறுக்­க­மு­டி­யாது. கூட்­ட­மைப்­பின் வெற்­றி­யில், அடை­வு­க­ளில் இது­வும் ஒன்று என்­ப­தை­யும் தட்­டிக்­க­ழித்­து­விட முடி­யாது.

எனி­னும் காணி விடு­விப்பு நிகழ்­வில் உரை­யாற்­றிய இரா­ணு­வத் தள­பதி லெப்­டி­னன்ட் ஜென­ரல் மகேஸ் சேன­நா­யக்க, இந்­தக் காணி விடு­விப்பு புத்­தாண்­டுப் பரிசு என்று கூறி­யி­ருந்­தார். ஒரு­வ­ரி­டம் இருந்து பறித்த பொருளை, அல்­லது மிரட்­டிக் கொள்­ளை­யிட்ட பொரு­ளைத் திரும்ப ஒப்­ப­டைப்­பதை யாரும் பரிசு என்று சொல்ல முடி­யாது. அது வார்த்தை வன்­மு­றை­யின் உச்­சம் என­லாம்.

தமிழ் மக்­கள் திரும்­பக் கேட்­டது இரா­ணு­வத்­தின் காணி­களை அல்ல தமது சொந்­தக் காணி­க­ளையே! பரம்­பரை பரம்­ப­ரை­யா­கத் தாங்­கள் கொண்­டி­ருந்த உறு­திக் காணி­க­ளையே! அவற்றை இவ்­வ­ளவு நாளும் ஆக்­கி­ர­மித்து வைத்­தி­ருந்­த­வர்­கள் இரா­ணு­வத்­தி­னரே!

நியா­ய­மா­கப் பார்த்­தால் தாம் ஆக்­கி­ர­மித்து வைத்­தி­ருந்த காணி­க­ளின் சொந்­தக்­கா­ரர்­க­ளுக்கு இழப்­பீடு கொடுக்க வேண்­டும் இரா­ணு­வம். பொது­மக்­க­ளின் காணி­க­ளில் உள்ள தமது முகாம்­களை இடம்­மாற்­று­வ­தற்கே அர­சி­டம் இருந்து பெரும் தொகைப் பணம் கேட்­கும் இரா­ணு­வம் மக்­க­ளின் காணி ­க­ளைத் திரும்ப ஒப்­ப­டைக்­கும் போது கட்­டா­யம் இழப்­பீடு வழங்­கி­யி­ருக்­க­வேண்­டும். ஆனால் அப்­படி நடக்­க­வில்லை. பதி­லாக, காணி­களை விடு­வித்­ததே “புத்­தாண்­டுப் பரிசு” என்று சொல்­கிற நிலை­தான் இருக்­கின்­றது.

இது ஒரு­வ­கை­யில், தமி­ழர்­கள் மீதான இரா­ணுவ மேலா­திக்க மனோ­நி­லை­யின் வெளிப்­பா­டு­தான். இரா­ணு­வம் பெரிய மனது வைத்­துக் காணி­களை விடு­வித்­தி­ருக்­கி­றது, அதற்கு நன்­றி­யு­ட­னி­ருங்­கள் என்று மறை­மு­க­மா­கச் சொல்­கி­றார் இரா­ணு­வத் தள­ பதி. இது முற்­றி­லும் தவ­றான ஓர் அணு­கு­முறை. மக்­கள் தமது சொந்த இடங்­க­ளுக்­குத் திரும்­பு­வ­தற்கு முழு உரித்­து­மு­டை­ய­வர்­கள். அதனை இலங்­கை­யின் உயர் நீதி­மன்­ற­மும் சுமார் 10 வரு­டங்­க­ளுக்கு முன்­னரே ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தது.

காணி உரி­மை­யா­ளர்­க­ளால் தொட­ரப்­பட்ட வழக்­கில், காணி­களை விடு­விப்­ப­தற்­கான கால அட்­ட­வணை ஒன்றை வெளி­யி­ட­வேண்­டும் என்று போர் நடந்­து­கொண்­டி­ருந்­த­போதே கட்­டளை பிறப்­பித்­தி­ருந்தது உயர் நீதி­மன்­றம்.

ஆனால், போர் முடிந்து 9 ஆண்­டு­கள் கடந்­து­விட்­ட­போ­தும் மக்­க­ளின் காணி­க­ளைத் திரும்ப ஒப்­ப­டைக்­காது இழுத்­த­டித்து வரும் இரா­ணு­வம்­தான் இங்கு தவறு செய்­கி­றது. மக்­கள் தமக்கு சட்­ட­பூர்வ உரித்­து­டைய உரி­மை­யைத்­தான் கேட்­டார்­கள், கேட்­கி­றார்­கள். அதை அடை­வது ஒரு­போ­தும் அவர்­க­ளுக்­கு­ரிய பரி ­சா­காது.

வலி. வடக்­குப் பகு­தி­யி­லேயே இரா­ணு­வம் பிடித்து வைத்­தி­ருக் கும் மக்­க­ளின் காணி­க­ளில் அரை­வா­சிப் பகுதி இன்­னும் விடு­விக் கப்­ப­ட­வேண்­டி­யி­ருக்­கின்­றது. 2009ஆம் ஆண்­டில் இரா­ணு­வம் பிடித்து வைத்­தி­ருந்த சுமார் 6,500 ஏக்­கர் நிலத்­தில் இன்­னும் 3,000 ஏக்கருக்கும் மேற்­பட்ட நிலப்­ப­ரப்பு விடு­விக்­கப்­ப­ட­ வேண்­டி­யி­ருக்­கின்­றது. அந்த நிலப்­ப­குதி எப்­போது விடு­விக்­கப் ப­டும் என்­பது இன்­று­வ­ரை­யில் தெளி­வாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

இப்­படி மக்­க­ளின் உரி­மை­யைத் தொடர்ந்து மீறிக்­கொண்­டி­ருக்­கும் இரா­ணு­வம், ஒரு பகுதி நிலத்தை விடு­வித்­து­விட்டு அத­னைப் பரிசு என்று அறி­விப்­பது அபத்­தம். அது ஒரு­போ­தும் ஏற்­பு­டை­ய­தும் அல்ல.

இதற்கு மத்­தி­யில் “இது உங்­கள் இரா­ணு­வம்” என்று தள­பதி மகேஸ் சேன­நா­யக்க திரும்­பத் திரும்­பக் கூறு­வ­தால் பயன் ஏதும் இருக்­காது. உண்­மை­யில் இது தமிழ் மக்­க­ளுக்­கான இரா­ணு­வ­மாக இருந்­தால் அது எப்­போதோ தனது மக்­க­ளுக்­கான நிலத்தை விடு­வித்­தி­ருக்­கும். எனவே உண்­மை­யைத் திரித்து இவ்­வாறு பேசு­வதை விடுத்து உண்­ைமயிேலயே தமி­ழர்­க­ளுக்­கு­மான இரா­ணு­வ­மாக இருப்­ப­தற்கு இரா­ணு­வம் முயற்­சிக்­க­வேண்­டும்.

You might also like