சாம்சனின் அதிரடியால் வென்றது ராஜஸ்தான்

ஐ.பி.எல். தொட­ரில் நேற்று மாலை நடை­பெற்ற ஆட்­டத்­தில், சாம்­ச­னின் அதி­ரடி ஆட்­டத்­தின் மூலம் பெங்­க­ளூரை வீழ்த்­தி­யது ராஜஸ்­தான் றோயல்ஸ்.

ராஜஸ்­தா­னின் இன்­னிங்ஸ்

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற பெங்­க­ளூர் அணி, முத­லில் களத்­த­டுப்­பைத் தீர் மா­னித்­தது. ராஜஸ்­தா­னின் ஆரம்ப வீரர் களாக ரகானே மற்­றும் சோட். ரகானே அதி­ர­டி­யாட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­னார். அதே­நே­ரம் நிதா­னித்து விளை­யா­டி­னார் சோட்.

அணி 49 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் 36 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார் ரகானே. அடுத்த சில நிமி­டங்­க­ளில் 11 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார் சோட். இதற்­காக அவர் 17 பந்­து­களை எடுத்­துக்­கொண்­டார்.

சாம்­சன், ஸ்ரோக்ஸ் இரு­வ­ரும் இணைப்­பாட்­ட­மாக 49 ஓட்­டங்­க­ளைப் பகிர்ந்­த­னர். 27 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார் ஸ்ரோக்ஸ். சாம்­சன், பட் லர் இரு­வ­ரும் இணைந்து அதி­ரடி ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­னார்­கள். 34 பந்­து­க­ளில் அரைச் சதம் கடந்­தார் சாம்­சன்.

அரைச்­ச­தத்­தின் பின்­னர் அவர், அதி­ர­டியை இரட்­டிப்­பாக்­கி­னார். 20 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் நிறை­வில் 4 இலக்­கு­களை இழந்து 214 ஓட்­டங் களைக் குவித்­தது ராஜஸ்தான். அந்த அணி இன்னிங்­ஸின் இறு­திப் பத்­துப் பந்­து­க­ளில் 42 ஓட்­டங்­க­ளைக் குவித்­தது.

சாம்­சன் 45 பந்­து­க­ளில் 92 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­டமி­ழக் கா­தி­ருந்­தார். இவற்­றில் 10 சிக்­சர்­க­ளும் அடங்­கு­ கின்­றன. பந்­து­வீச்­சில் வோக்ஸ், சாகல் இரு­வ­ரும் தலா இரு இலக்­கு­க­ளைக் கைப்­பற்­றி­னர்.

பெங்­க­ளூ­ரின் இன்­னிங்ஸ்

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய பெங்­க­ளூர் அணிக்கு ஆரம்ப வீரர்­க­ளாக மக்­க­லம் மற்­றும் குயின்­டன் டி ஹொக். நான்கு ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார் மக்­க­லம். குயின்­டன் டி ஹொக் மற்­றும் கோக்லி இணைந்து சிறப்­பான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்த ஆட்­டத்­தில் வெற்­றி­பெ­றக்­கூ­டிய வாய்ப்­புக்­க­ளும் பெங்­க­ளூ­ருக்கு ஏற்­பட்­டது.

26 பந்­து­க­ளில் அரைச்­ச­தம் கடந்­தார் அணித் தலை­வர் கோக்லி. குயின்­ட­னும் 26 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழக்க பெங்­க­ளூ­ரின் வெற்­றி­வாய்ப்பு மங்­கி­யது. வில்­லி­யர் ஸால் முடிந்­தது 20 ஓட்­டங்­கள். இதற்­காக அவர் 18 பந்­து­களை எதிர்­கொண்­டார். மன்­டீப் சிங், வொஷிங்­டன் சுந்­தர் இரு­வ­ரும் இணைந்து சிறந்த போராட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­னர்.

வெற்­றிக்கு அரு­கில் அணியை அழைத்­துச் செல்­லவே அவர்­க­ளால் முடிந்­தது. மாறாக வெற்­றி­பெற வைக்க இய­ல­வில்லை. முடி­வில் 6 இலக்­கு­களை இழந்து 198 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது பெங்­க­ளூர். 19 ஓட்­டங்­க­ளால் வெற்­றி­பெற்­றது ராஜஸ்­தான் றோயல்ஸ்.

பந்­து­வீச்­சில் கோபால் 2 இலக்­கு­க­ளை­யும், கௌதம், ஸ்ரோக்ஸ், ஷோட் மூவ­ரும் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

You might also like