கொல்­கத்­தாவை வென்­றது ஹைத­ரா­பா­த்

ஐ.பி.எல். தொட­ரில், நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்­தில், கொல்­கத்­தாவை வீழ்த்­தி­யது ஹைத­ரா­பாத் அணி.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற ஹைத­ரா­பாத் அணி முத­லில் களத்­து­டுப்­பைத் தீர்­மா­னித்­தது. கொல்­கத்தா அணி­யின் வழங்­க­மான துடுப்­பாட்ட வரிசை மாற்­றப்­பட்­டது. நரைன் நான்­கா­வது வீர­ரா­கக் கொண்டு செல்லப்­பட்டு, நான்­கா­வது வீர­ரான உத்­தப்பா ஆரம்­பத் துடுப்­பாட்ட வீர­ரா­கக் கள­மி­றக்­கப்­பட்­டார்.

கொல்­கத்தா அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் 8 இலக்­கு­களை இழந்து 138 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக லின் 49 ஓட்­டங்­க­ளை­யும், டினேஸ் கார்த்­திக் 29 ஓட்­டங்­க­ளை­யும், ரணா 18 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் புவு­னேஸ்­வர்­கு­மார் 3 இலக்­கு­க­ளை­யும், சகிப் அல்ஹசன், ஸ்ரான்­லேக் இரு­வ­ரும் தலா 2 இலக்­கு­க­ளை­யும், கருல் ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய ஹைத­ரா­பாத் அணி 19 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் 5 இலக்­கு­களை இழந்து இலக்கை அடைந்து வெற்­றி­பெற்­றது. அணித் தலை­வர் வில்­லி­யம்­சன் 50 ஓட்­டங்­க­ளைப் பெற்று வெற்­றிக்குப் பெரி­தும் உத­வி­னார். சகிப் அல் ஹசன் 27 ஓட்­டங்­க­ளை­யும், சகா 24 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

You might also like