கைது செய்யப்பட்டார் மகிந்தானந்த அளுத்கமகே !!

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் இன்று காலை முன்னிலையாகி, வாக்குமூலம் வழங்கியவர் பின்னர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.

மகிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த போது, 53 மில்லியன் ரூபா அரச நிதியை மோசடி செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தான் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அவர் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்திருந்தார்.

எனினும், குறித்த கோரிக்கை உயர் நீதிமன்றார் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிதிக்குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

You might also like