விடுவிக்கப்பட்ட பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வீதி!!

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள ஆவளை சந்தியிலிருந்து மயிலிட்டி கிராமக்கோட்டடி சந்தி வரையான கட்டுவன் வீதிக்கு செல்லும் வீதி தற்போதும் மூடப்பட்டுள்ளது.

இதனால் அந்த வீதியிலுள்ள இருபக்க காணி உரிமையாளர்கள் தமது காணிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்கனவே இராணுவத்தினர் தனியார் காணிகள் ஊடாக பாதைகளை அமைத்து பாவித்துள்ளனர். அதனை அண்டிய பகுதிகளே விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உண்மையான பாதைகள் விடுக்கப்பட்டாலே விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள மக்கள் தமது காணிகளுக்குச் செல்ல முடியும் என்று வலி.வடக்கு இடம் பெயர்ந்தோர் மீள்குடியேற்ற குழுவின் தலைவர் சஜீவன் தெரிவித்துள்ளார்.

You might also like