லண்டன் தூதரகத்தில் மைத்திரிக்கு வரவேற்பு!!

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் பயணித்துள்ள அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை லண்டன் நகரைச் சென்றடைந்தார்.

லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அலுவலர்கள் அதிகாரிகள், லண்டனில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்டோர் அரச தலைவரையும், அவரது பாரியரையும் வரவேற்றனர்.

இன்று  முதல் 20 ஆம் திகதி வரையில் லண்டனில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்பதற்காகவே அரச தலைவர் லண்டனுக்குப் பயணித்துள்ளார்.

இதன் போது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளது அரச தலைவர்கள் பலருடனும் சந்திப்புக்களை நடத்தவுள்ளார். பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் 92ஆம் பிறந்த தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்கும் மைத்திரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

You might also like