விபத்தில் தீப்பற்றி எரிந்த வாகனங்கள்!!

அம்பலாந்தோட்டை சிசிலகம பிரதேசத்தில் தனியார் பேருந்தும், முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. அதில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்து 9 மாதக் குழந்தை உட்பட 4 பேர் தீக்காயமடைந்தனர். அவர்கள் அம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like